சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி சார்பில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான 21வது எஸ்எஸ்என் கோப்பை விளையாட்டுப் போட்டி நடந்தது. அதில் கூடைப்பந்து ஆண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் சென்னை எம்ஓபி கல்லூரி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன. பேட்மின்டன் விளையாட்டில் முதல் 2 இடங்களை ஆண்கள் பிரிவில் எஸ்ஆர்எம், எஸ்எஸ்என் கல்லூரிகளும், பெண்கள் பிரிவில் எஸ்ஆர்எம், எம்ஓபி கல்லூரிகளும் கைப்பற்றின.
அதே போல் ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் எஸ்எஸ்என் கல்லூரி முதலிடத்தையும், செயின்ட் ஜோசப் கல்லூரி 2வது இடத்தையும் வென்றன. பரிசளிப்பு விழாவில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். அப்போது கல்லூரி நிர்வாகிகள் கலா விஜயகுமார், ராதா ஆகியோர் உடனிருந்தனர்.