ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் மறைவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், குன்றத்தூர் நகர திமுக செயலாளர், நகரமன்ற தலைவருமான கோ.சத்தியமூர்த்தியின் தந்தையுமான ஏ.கோதண்டம் இயற்கை எய்தினார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஸ்ரீபெரும்புதூர் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர். இருமுறை அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அரசியல் அனுபவம் மிக்க அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு சில அறிவுரைகள் வழங்கியவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், திமுக நண்பர்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
0