ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடபட்டது. விழாவிற்கு ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். வட்டார தலைவர் நிக்கோலஸ் கலந்துகொண்டு, ராஜிவ்காந்தியின் உருவ படததிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் 500 பேருக்கு இனிப்பு வழங்கபட்டது. முன்னதாக, ராஜிவ்காந்தி நினைவிடத்தில் நகர தலைவர் அருள்ராஜ் தலைமையில், மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்கிருந்து நெடுஞ்சாலை வழியாக பேரணியாக சென்று ஸ்ரீபெரும்புதூர் மணி கூண்டு பகுதிக்கு சென்றடைந்தனர். இந்நிகழ்வில், கட்சி நிர்வாகிகள், குன்றத்தூர் வட்டார தலைவர் எருமையூர் ஏழுமலை, இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருஙகிணைப்பாளர் அனிஷ், நாராயணன், உதயகுமார், சுமிதா பாஸ், சாந்தகுமார், முருகன், மோகித், பூவரசன், குமரேசன், சுந்தர்ராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.