கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம் செய்துள்ளது. மேலும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம்.
இன்று ஒரே நாளில் 32 மீனவர்களையும், 5 படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.