சென்னை: சென்னையில் இலங்கை வியாபாரி முகமது ஷியாம் கடத்தல் வழக்கில் மேலும் 3பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கத்தில் தலைமறைவாக இருந்த இருவரை கைது செய்தபோது மேலும் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். பணப்பிரச்னையில் முகமது ஷியாமை கடத்தியதாக சித்ரா, தினேஷ், வேல்முருகன், ரியாசுதீன் அஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.