சென்னை: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 மீனவர்கள் சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 22 பேர் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் இருந்து சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை பாஜக சார்பில் மாநில செயலாளர் சதீஷ்குமார், மாநில மீனவரணி தலைவர் முனுசாமி ஆகியோர் வரவேற்று சால்வை அணிவித்தும், உணவு பொருட்கள் வழங்கியும் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் சொந்த ஊருக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.