மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு செல்லும் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 10.05 மணியளவில் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வேண்டியவர்கள் பாதுகாப்பு சோதனைகளை முடித்து புறப்பட்டு கொண்டிருந்தனர். இதில் இலங்கையை சேர்ந்த சிவகஜன்லிட்டி (43) என்பவர், தமிழகத்தில் ஆன்மீக சுற்றுலாவை முடித்து விட்டு திரும்புவதற்காக வந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். தகவலறிந்து மருத்துவ குழுவினர் விரைந்து வந்து, இலங்கை பெண்ணை பரிசோதித்தனர்.
மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரியவந்தது. உடனே விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசார் 174வது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், சென்னையில் உள்ள இலங்கை தூதகரத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானம் தாமதமாக காலை 11.06 மணியளவில் புறப்பட்டது.