கொழும்பு: இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் நேற்று 2வது டெஸ்ட் கொழும்பு மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அமனுல் ஹக் டக் அவுட் ஆக, சதாம் இஸ்லாம் 46 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்களான மொமினுல் 21 ரன், கேப்டன் சான்டோ 8 ரன், முஷ்டபிர் ரகீம் 35 ரன், லிட்டன் தாஸ் 34 ரன், மெகந்தி ஹசன் 31 ரன், நயீம் ஹசன் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். வெளிச்சமின்மை காரணமாக 71வது ஓவருடன் முடிந்த முதல் நாள் ஆட்டநேர இறுதியில் வங்கம் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.
தஜூல் இஸ்லாம் 9 ரன், உசைன் 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னான்டோ, விஷ்வா பெர்னான்டோ, சோனல் தினுசா தலா 2 விக்கெட், தரினினு ரத்னநாயக, தனஞ்சயா டிசில்வா தலா 1 விக்கெட் எடுத்தனர். இன்னும் 2விக்கெட் கைவசம் இருக்க வங்கம் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளது.