கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 17 பேர் அதிபர் தேர்தலில் களமிறங்குகின்றனர்