இலங்கை கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆட்டிப்படைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பிசிசிஐக்கு அடிபணிந்து செல்கின்றனர். இந்தியாவில் உள்ள ஒரு மனிதர் இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருவதாக ஜெய் ஷா மீது அர்ஜுன ரணதுங்கா கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தை அமித் ஷாவால் மட்டுமே ஜெய் ஷா சக்திவாய்ந்தவராக உள்ளார் என்று அர்ஜுன ரணதுங்கா குற்றம் சாட்டியுள்ளார்.