கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 1 கொடியே 71 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் 13 ஆயிரத்து 421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் 90 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி கொழும்பு, பழுத்துறை, கிளிநொச்சி, முல்லைதீவு ரத்தின புரி உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் மந்தமாகவே இருக்கிறது. இன்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்த சற்று நேரத்திலேயே வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்க்ஷே குடும்பத்தில் இருந்தும் யாரும் களமிறக்கப்பட வில்லை. இதனால் அதிபர் திஸாநாயக்கவின் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இலங்கை தேர்தல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.