Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை..!!

கொழும்பு: நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 19 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஜூன் 23-ம் தேதி நெடுந்தீவு அருகே விசைப்படகில் தமிழ்நாடு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படை தமிழ்நாடு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மீனவர்களின் வழக்கு விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிபதி, 22 மீனவர்களில் 19 மீனவர்கள் விடுதலை செய்து உத்தரவிட்டார்.