பகுதி 2
மனதில் நீண்டநாட்களாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நிறைவேறுவது, எதிர்பார்த்த வாய்ப்பு கிடைப்பது, விரும்பிய பொருள் கிடைப்பது, ஒரு பதவி அல்லது பொறுப்பு கிடைப்பது, சமூகத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைப்பது போன்றவற்றையும் 11-ஆம் பாவத்தின் மூலம் பார்க்கலாம்.
5-ஆம் பாவம் (bhavan - தன்மை) ஒருவனுடைய எண்ணம், விருப்பம், படைப்பாற்றல் போன்றவற்றைக் காட்டுகிறது. அந்த எண்ணம் அல்லது விருப்பம் நடைமுறையில் நிறைவேறி பலனாக வந்து சேர்வதை 11-ஆம் பாவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். 11-ஆம் பாவம் நண்பர்கள், தொடர்புகள், பெரிய சமூக வட்டாரம், சங்கங்கள், குழுக்கள், ஆதரவாளர்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது.
3, 6, 10, 11 ஆகியவை உபசய ஸ்தானங்கள். உபசய பாவங்களின் சிறப்பு என்னவென்றால், காலம் செல்லச் செல்ல அவற்றின் பலன்கள் வளரக்கூடிய தன்மை கொண்டவை. அதனால், ஒருவருடைய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை மட்டும் வைத்து 11-ஆம் பாவத்தின் பலனை மதிப்பிடாமல், வயது அதிகரிக்கும்போது லாபம் மற்றும் தொடர்புகள் எவ்வாறு வளர்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.
பதினோராம் வீட்டுக்குரிய கிரகமானது கெட்டு விடாமல் இருக்க வேண்டும் லக்னத்தோடு தொடர்புகொண்டால் பெரிய படிப்பாளியாக இருப்பார்கள். இரண்டாம் இடத்தோடு தொடர்பு கொண்டால் மூத்தவர்கள் உதவி இருக்கும். இனிமையாக பேசுவார்கள் .பேச்சினால் நல்ல லாபம் கிடைக்கும். காரணம் இரண்டு 11 ன் தொடர்பு பெறுகிறது.
பதினோராம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் அமர்ந்திருந்தால் மூத்த சகோதர சகோதரிகள் நல்ல கௌரவத்தோடு இருப்பார்கள். அவர்கள் ஆதரவும் கிடைக்கும். பதினோராம் இடம் நாலாம் இடத்தோடு தொடர்பு கொண்டால் தாய் வழி சொந்தங்களால் ஆதாயம் கிடைக்கும். வண்டி வாகனங்களால் லாபம் உண்டு. ஆசையோடு பார்த்து பார்த்து வீடு கட்டுவார்கள்.
ஐந்தாம் இடம் பதினோராம் இடத்தோடு தொடர்பு கொண்டால் பிள்ளைகளால் பெருமை உண்டு. பூர்வீக தொழிலைச் செய்து லாபம் சம்பாதிப்பார்கள். கௌரவம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆனால், இரட்டைப்படை பாவமான எட்டாம் பாவமோ ஆறாம் பாவமோ 11 ஆம் பாவத்தோடு தொடர்பு கொண்டால் தொழில் நஷ்டம் ஏற்படும். ஆசைக்காக கடன் வாங்க வேண்டி இருக்கும். மூத்தவர்களோடு பகை ஏற்படும் அல்லது மூத்தவர்களுக்கு விபத்து நோய் முதலிய சங்கடங்கள் ஏற்படலாம்.
பத்தாம் இடம் தொழில். 11ஆம் இடம் லாபம். பத்தாமிடம் உத்தியோகம் பதினோராம் இடம் அதற்கு இரண்டாம் இடமாக அமைவதால் அந்த உத்தியோகத்தால் கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். எனவே, பத்தாம் இடமும் பதினோராம் இடமும் இணைப்பு பெறுவது சிறப்பு. கெளரவமான உத்தியோகமு ம் அதனால் பெரும் வருமானமும் சிறப்புடையதாக இருக்கும்.
11க்குரிய கிரகம் பதினோராம் இடத்திலேயே இருப்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிகச் சிறப்பாக சொல்லப்படவில்லை. கஷ்டங்கள் வராதே தவிர மிகப்பெரிய லாபங்களும் ஏற்படாது. தெய்வீக வழிபாடு முதலிய விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள், மூத்த சகோதர சகோதரிகளுடன் கவனமான வாழ்க்கை அந்தஸ்தான வாழ்க்கை வாழ்வார்கள். நீண்ட வெளிநாட்டுப்பிரயாணத்தையும் 11ம் பாவம் குறிக்கும்.
எனவே, பெருமாள், மகாலட்சுமி கோயிலுக்குச் சென்று தரிசித்து வாருங்கள். 11ம் இடம் எப்போதும் வலிமை பெறும். அதேபோல மூத்த சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் உதவுங்கள். வாழ்க்கை நல்ல விதமாய் மாறும்.
(தொடரும்)



