Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

இன்றைய சிறப்பும் சிற்பமும் வரிசையில் பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள் கண்டேன். ஆந்திர பிரதேசம் ஒண்டிமிட்டா கோரண்ட ராமசுவாமி கோயில், பாண்டேயூ ஆலயம், வெங்கடரமணர், இடம் பெற்ற அனைத்து சிற்பங்களும் காணக் கிடைக்காத காட்சி. இவற்றை பார்த்தபோது ஆலயத்தை சுற்றிப் பார்த்த நிறைவு ஏற்பட்டது.

‘இன்றைய முத்துக்கள் முப்பது’ வரிசையில் ஸ்ரீ ராம நவமியும், பங்குனி உத்திரமும் கண்டேன். அவதாரங்கள் இரண்டு. விரதம் இருப்பது எப்படி, ராம நாமம் சொல்லுங்கள். மற்றும் ஏழு பிரகாரமும், ஏழு காண்டமும் பல புரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன்! ‘நமக்குள் இருவர்’ தலையங்கம் கண்டேன். ஒருவருக்கு உதவி செய்து விட்டு பலனை எதிர்பார்க்காமல் நகர்ந்து செல்ல வேண்டும். இதுவே பிரார்த்தனையின் செயல் வடிவம். மெய்சிலிர்க்க வைத்தன. அனைவரும் இது மாதிரி நடந்து கொண்டால் போதும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா கண்டேன். ஒவ்வொரு மூவர் பற்றியும் தெள்ளத் தெளிவாக விவரங்களை தந்தது அற்புதம். உண்மையில் இப்போதுதான் அறுபத்து மூவரை ஆழமாக புரிந்து கொண்டேன். தங்களுக்கு என் நன்றிகள்!

- வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு.

கண்ணனை நினைக்காத நாளில்லையே என்று அனுதினமும் அவரையே எண்ணி வாழ்ந்து கண்ணன் பால் கொண்ட ஆழ்ந்த பக்தியினை பக்த மீராபாயின் மகத்துவங்களை விவரித்த கட்டுரையை படித்ததும் பக்தி பரவசம் மனதில் நிறைந்து நிலைத்து விட்டது.

- த. சத்தியநாராயணன், அயன்புரம்.

அருள் தரும் ஆன்மிக மலரில் வெளியாகும் அனைத்து பகுதிகளும் அசத்தல்

- எம். சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

சூத்திர தாரியான கண்ணன், பக்தர்களை சோதித்து ஆட்கொள்வதில் சிறப்பு நிறைந்தவன். பக்த மீராவின் வாழ்விலும் அது விதிவிலக்கல்ல என்பதை அருள் தரும் ஆன்மிகத்தின் அரிய பக்கங்கள் வெள்ளிடை மலையாக உணர்த்தி நின்றன.

- இராம. கண்ணன், திருநெல்வேலி.

உண்மையான ஆன்மிகம் எது? நிஜமான பிராத்தனை எது? என்பதை பொறுப்பாசிரியர் காரண காரியங்களோடு தெளிவு படுத்தி இருப்பது ஆத்மார்த்தமானது.

- கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

கும்பகோணம் ராமர் கோவில் பற்றிய வரலாறும் கோவிலின்சிற்பக் கலைகள், மற்றும் கோவிலை பற்றிய செய்திகள் அருமை. கோவிலை உடனே காண வேண்டிய ஆர்வத்தை தூண்டியது. ராமபிரானின் முகப்பு அட்டைப்படமும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் இணைப்பு வண்ணப் படமும் மிக அருமை. ராமநவமி, பங்குனி உத்திரம் பக்தி ஸ்பெஷல் அருள்தரும் ஆன்மிகம் புத்தகம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

- எஸ். ஸ்ரீனிவாசன், சென்னை.

நலன் தரும் ஸ்ரீராம நவமியின் சிறப்புகள், பங்குனி உத்திரத்தில் நடக்கும் தெய்வத் திருமணங்கள். பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடும் ஆலயங்கள் என்று எல்லாவற்றையும் அறியப்படுத்திய கோகுலாச்சாரியார் வாசகர்களை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

- ஆர்.கே. லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.

நமக்குள் இருவர் பிரார்த்தனையின் செயல் வடிவம் பற்றி பொறுப்பாசிரியர் சிறப்புடன் எழுதியுள்ளார்கள்! பாராட்டுக்கள்! பக்த மீராபாய் கதையும் வித்தியாசமாக இருந்தது! பழம் பெரு ஆலயங்களின் ராமாயணச் சிற்பங்கள், ராஜ யோகம் அருளும் கும்பகோணம் ராமஸ்வாமி, அறுபத்து மூவர் விழா, புராணங்கள் சுட்டும் இலக்கு என ஆன்மிக இதழ் நன்றாக இருந்தது.

- ஏ. என். சிதம்பரம், விராச்சிலை.