Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

``ஆணவத்தை போக்கிய ராமதாசர்’’ என்னும் கட்டுரையில், ``மராட்டிய வீரன் சிவாஜி தனது பணியாளர்கள் ஆயிரக்கணக்கானவர்களும், தன்னால்தான் வாழ்கிறார்கள்’’ என்றிருந்த ஆணவத்தை கல்லினுள் தேரைக்கும் உணவு கொடுப்பது கடவுள் என்பதை உணர்த்துவதின் மூலம் ராமதாசரின் ஞானம் பளிச்சிடுகிறது! இதன் மூலம் நாமும் ஞானத்தை கற்க முடிகிறது.

- என்.ஜானகிராமன், திருநெல்வேலி.

தமிழ்நாட்டில், துர்காதேவியானவள் முகம் அமைப்பில் இயல்பாக காட்சி தந்தாலும், வடமாநிலங்களில் பெரும்பாலும் பறவை முகத்தோடு காணப்படுகின்றன என்பதையும், பகளாமுகி என்றால் கொக்குமுகம் என்பதையும் அருள் தரும் ஆன்மிகம் இதழ் வழியே தெரிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி.

- எஸ்.பரமேஸ்வரன், திருவானைக்கோவில்.

அட்டைப் படத்தில் தில்லை கூத்தரின் ஆனித்திருமஞ்சன தரிசனம் அற்புதம். மது ஜெகதீஷ் அவர்களின் கைவண்ணத்தில்ஸ்ரீ வைத்தீஸ்வரர் கோயில், சிந்தாமணி நல்லூர் புகைப்படம் அற்புத சிலை வடிவங்களை தரிசித்தோம். அதே போல், திருப்புகழ் பஞ்சபூத தலங்கள் வரிசைகளில், திருவண்ணாமலை பற்றி ஒவ்வொரு பிரகாரமாக இருக்கும் தெய்வ சிலைகள் பற்றி விளக்கமாக வர்ணித்தது, கோயிலை நேரில் தரிசனம் செய்தது போல் இருந்தது.

- லட்சமி சங்கர், காட்பாடி.

காளியின் அருள் பெற்ற மகாகவி காளிதாசர் பற்றிய அரிய தகவல்களை அறிய வைத்திடும் கட்டுரை, விறுவிறுப்பாக இருந்தது. காளிதாஸ சரம ஸ்லோகத்தைப் பாட, போஜராஜ மன்னர் இறந்து போவதும், நெகிழ வைத்துவிட்டது. மேலும், சூரிய பகவான் ஆதித்த பகவானாய் சிறப்பு பெயரில் போற்றப்பட்டு, அவர் அருள் ஆட்சி புரியும் பிராணவரதேஸ்வரர் ஆலயத்தின் அருகில் உள்ள சூரியனார் கோயிலின் வரலாற்றை சூரிய பகவானின் மகிமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய கட்டுரை, வெகு அற்புதம்.

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நரியைப் பரியாக்கும் சூட்சுமம் குறித்த புதிய விளக்கம் அடங்கிய தலையங்கம், ராஜபுரம் மருவி ராசிபுரம் ஆனது, ஆதித்ய சோழர்கள் கட்டிய தலங்கள் ஆதித்யேஸ்வரம் என அழைக்கப்படுவது, நாதமுனிகளால் கிடைக்கப் பெற்ற நாலாயிர திவ்யப் பிரபந்தம்,ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரைகள் என எல்லாமே அருமை!

-ஸ்ரீ காந்த், பிட்சாண்டார் கோயில், திருச்சி.

பெட்டி காளியம்மன் கொரநாட்டுக் கருப்பூர், மகாமாரியம்மன் கீழ் மாந்தூர், மாரியம்மன் திண்டுக்கல் மற்றும் ெகாப்புடைய நாயகி நித்திய சுமங்கலி மாரியம்மன் வெட்டுவாணம் எல்லையம்மன் - இந்த ஆலயங்களின் சிறப்புக்களை தந்து இந்த இதழை சிறப்படைய செய்துவிட்டீர்கள். அது மட்டுமா, முத்துக்கள் முப்பது வரிசையில் ஆனித் திருமஞ்சனமும் ஆடல்வல்லானின் அற்புத தரிசனமும் சூப்பர்.

அருவம் உருவம் அருவுருவம் சிவலிங்கமாக காட்சி அமைந்தது. சிதம்பர ரகசியத்தை நினைவு கூர்ந்தது மற்றும் நடராஜர் அபிஷேகம் எப்படி நடக்கும், அது மட்டும் இல்லாமல் ஏன் முகம் சாய்ந்து இருக்கிறது என்பதற்கு விளக்கம் தந்தது அற்புதம், நன்றிகள்! மேலும், விசித்திரமான யோகங்கள் அருளும் விசித்திரா யோகினியை கண்டேன். உண்மையிலேயே விசித்திர அழகான பறவையின் முகம், கொண்டவள். மார்புக்கு அருகில் தாமரை, மடியில் குருவி, யோகினிகளுக்கு மிருகத்தலை ஏன் என்ற வினாக்களுக்கு பதில் தந்தது, அருமை. இதை இப்போதுதான் படிக்கிறேன். வியப்பாக இருந்தது.

- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஆனித் திருமஞ்சனம் பக்தி ஸ்பெஷல் அற்புதம்! நரியை பரியாக்கும் சூட்சுமம் சிறப்புடன் கூறப்பட்டுள்ளது. அதே போல் புதிய தொடராக வந்துள்ள நடராஜப் பத்தின் அபூர்வ தத்துவ விளக்கமும் மிகவும் நன்றாக இருந்தது. காளியின் அருள் பெற்ற காளிதாசர், விசித்திரா யோகினி, ஆதித்த பகவானின் அருளும் - மகிமையும், தெளிவு பெறு ஓம், விஷ்ணு புராணம், கட்டாரி நடராஜர் என இதழ் பளிச்சென இருந்தது. வண்ணப்படங்களும், அச்சும், வடிமைப்பும் பிரமாதம். உபயோகமான இதழ்!

- ஏ.என்.சிதம்பரம், விராச்சிலை, புதுக்கோட்டை.