Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உள்ள(த்)தைச் சொல்கிறோம்

லால்குடியில், அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில், காகபுஜண்டர் சூட்சுமமாக ஒரு தூணில் வசிக்கிறார் என இந்த இதழ் மூலம் அறிந்துகொண்டேன். மேலும், பிரசாதங்கள் பற்றிய முத்துக்கள் முப்பது கட்டுரையும் சிறப்பாக இருந்தது!

-ஸ்ரீ காந்த், பிக்ஷாண்டார் கோயில், திருச்சி.

தெய்வீக மணம் கமழும் பிரசாதங்களின் மகிமையை சிறப்புடன் எழுதப்பட்டு உள்ளது. பாயசத்தை அருந்தினால் மக்கட்பேறு, பகவத்கீதை உரை, சிவசக்தியின் உரைகள் பெருமைகள், தன்வந்திரி லேகியம், கோபூஜை செய்வதன் விபரம், தத்துவங்களும் நீதிகளும், பஞ்சபூத தலங்கள், அப்பம் விரும்பும் ஆனைமுகன் என்னும் கட்டுரை என இதழே சிறப்பு அம்சமாக இருந்தது.

- A.N.சிதம்பரம், விராச்சிலை.

முத்துக்கள் முப்பது என்னும் தொகுப்பில் தெய்வீக மணம் கமழும் பிரசாதங்களின் மகிமையை கண்டேன். எந்தெந்த இறைவனுக்கு என்னென்ன பிரசாதங்கள் படைக்க வேண்டும் என்பதை அழகாக விரிவாக கூறியது அற்புதம். இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதம், அதன் பின்னணியில் உள்ள அன்பையும், பக்தியையும் குறிப்பிட்டது, சிறப்பிலும் சிறப்பு. அது மட்டும் இல்லாமல், நேரடியாக பகவான் சாப்பிட்டார் என்று கூறியது புல்லரிக்க வைத்தன. மேலும், `‘ஞான பஞ்சாட்சரம்’’ என்ற தலையங்கத்தில், அருண என்றால் ஜோதிமயமானது அசலம் என்றால் மலை மற்றும் ஜோதிமலை என்றும் கூறலாம் என்கின்ற அழகாக விளக்கத்தை அளித்தது, மறக்க முடியாதது.

- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

``பிரம்மம்’’ என்ற ஐந்து பக்கத் தொகுப்பும் படங்களும், அதி அற்புதமாக இருந்தது. பரமஹம்சரின் தேடல் தத்துவங்களைப் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து நெஞ்சில் பதிய வைத்து விட்டீர்கள்!

- ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.

முத்துக்கள் முப்பது பகுதியில் தெய்வீக மணம் கமழும் பிரசாதங்களின் மகிமை என்ற தலைப்பிலான கோகுலாச்சாரி அவர்களின் கட்டுரை, தெய்வீக அருளை எங்கள் மனதுக்குள் மணம் பரப்பியது எனில், அது மிகை அல்ல.

- கா.சித்ராகாமராஜ், கோவை.

ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புப் பலன்கள் உண்டு என்பதையும், பொதுவாக விரதமிருந்தால் உடலும் உள்ளமும் வலிமைபெறும் என்பதையும், அருள் தரும் ஆன்மிக இதழின் ``தெளிவு பெறுஓம்’’ பகுதி வாயிலாக தெளிவு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

- எஸ்.பரமேஸ்வரன், திருவானைக்கோவில்.

தினைமாவு முதல் மோதகம் வரை இறைவனுக்கு படைக்கப்படும் தெய்வீக மணம் கமழும் பிரசாதங்களின் மகத்துவங்களை, அந்த பிரசாதங்கள் படைக்கப்படுவதன் தாத்பர்யங்களை, அந்த பிரசாதங்களால் பக்தர்களுக்கு உண்டாகும் நன்மைகளை, சந்தோஷங்களைத் தொகுத்து வழங்கப்பட்ட முத்துக்கள் முப்பது கட்டுரை படித்து சுவைத்தோம். இந்த தொகுப்பு எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

அது மட்டுமா.. நில நடுக்கத்தால் சிதிலமடைந்து போன புஜ் நகரத்தில், அந்த கொடிய பூகம்பத்தையும் தாங்கி கம்பீரமாய் காட்சி தரும் ‘புஜ்சுவாமி நாராயண் கோயிலுக்கு எழில் சேர்க்கும் சிற்பங்களின் சிறப்புக்களைப் படித்து பிரமிப்பை அடைந்தேன். இயற்கைப் பேரழிவிலிருந்து மீண்டு இந்திய தேசத்தின் அதிசய ஆலயமாக பெருமை பெற்று திகழ்வதை விவரித்த கட்டுரையை மறக்க முடியாத இனிய இறை அனுபவமாகும்.

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

வன்னிவேடு முருகனுக்கு, பீட்ரூட் சாதம் பிரசாதம் என்ற தகவலை கேட்பதற்கு மனம் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், பீட்ரூட் முருகப் பெருமானுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது என்ற தகவலை, முதன் முதலாக அருள் தரும் ஆன்மிகம் இதழில் வாயிலாக அறிந்து கொண்டதுதான். வன்னிவேடு முருகனுக்கு அரோகரா!

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.