Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொருளாதாரத்தையும் திறமையையும் மேம்படுத்தும் விருட்சங்கள்!

ஆதிகாலம் முதல் இன்றுவரை மானுட வாழ்வில் விருட்சங்கள் தொடர்புடன் இருக்கின்றன. இதன் பொருள் என்னவெனில், ஒரு விருட்சத்தை அடிப்படையாகக்கொண்டு அதனுடன் இருக்கும் தொடர்பு மானுடத்திற்கு சாத்தியமான சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும் பட்சத்தில் விருட்சங்கள் தொடர்ச்சியாக மானுடம் பயன்படுத்தி வந்துள்ளது. ஒவ்வொரு விருட்சமும் ஒவ்வொரு பிரசித்தி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் தன ஆகர்ஷண விருட்சங்கள் பற்றி தெளிவோம்...

இந்த விருட்சங்களை எப்படி கையாள வேண்டும் என அறிந்து தெரிந்து கையாள்வது சிறப்பு. ஒவ்வொரு விருட்சமும் ஒவ்வொரு உயிரின் படைப்பு தன்மைக்கு உட்பட்டது. அது நமக்கு சாதகமாக இல்லாவிடில் பாதிப்புகள் உண்டாகும். மேலும், சரியான விருட்சங்களை சரியான இடத்தில் வளர்க்காவிடில் நமக்கு துன்பத்தை உண்டாக்கும். ஆகவே, ஒரு செடியையோ அல்லது மரத்தையோ வீட்டில் வளர்க்கும் முன் நமக்கும் இயற்கைக்கும் நன்மை செய்யுமாயின் தொடர்வது நல்லது.

மேஷம் ராசிக்காரர்களுக்கு நான்காம் பாவகமாக கடகம் வருகிறது. இதற்குரிய அதிதேவதை சந்திரன். இதற்குரிய விருட்சம் மாமரம், இந்த மரத்தினை உபய லக்னக் காரர்கள் வீட்டில் வளர்த்தல் கூடாது. அவ்வாறு பூர்வீகமாக இருந்தால் அகற்றவும் கூடாது. வீட்டில் இந்த மரம் இருக்கும் பொழுது பெயர் மாற்றம் செய்யும் நபர்கள் தங்களுக்கு மேற்கண்ட லக்னம் இல்லாதவர்கள் பெயர்களுக்கு மாற்றம் செய்து கொள்வது நன்மை செய்வதாக இருக்கும்.

ரிஷபராசிக்காரர்கள் நான்காம் பாவகம் சிம்ம ராசியாக கொண்டவர்கள். இந்த ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனுக்குரிய விருட்சம் - எருக்கன் செடி, இந்த மரங்கள் மிகவும் வறட்சியான பகுதிகளில் வளரக்கூடியவை. இவர்கள் இந்த எருக்கமரத்தில் மாலை செய்து விநாயகரையும் - சிவனை வழிபடுபவர்கள் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும். இந்த ெசடியை வீட்டில் வளர்க்கலாம் ஆனால்,தரையில் வைத்து வளர்ப்பதை விட தொட்டியில் வளர்ப்பது சிறந்தது.

மிதுனம் மற்றும் மீன ராசிக் காரர்களுக்கு நான்காம் வீடாக மிதுனமும் கன்னியும் வருகிறது. இந்த ராசிக்கு அதிபதி புதன் ஆகும். இதற்குரிய விஷ்ணு கிரந்தி மூலிகை மற்றும் நாயுருவி ஆகியவற்றை வீட்டில் வைத்துக் கொள்வது நன்மை உண்டாக்கும். ஆனால், விஷ்ணு கிரந்தி முலிகை கிடைப்பது அரிது. இதனால் சில தோஷங்கள் நீங்கி உங்களின் தனிப்பட்ட திறமைகள் மேம்படும்.

கடகம் மற்றும் கும்பராசிக் காரர்களுக்கு நான்காம் பாவகமாக துலாம் மற்றும் ரிஷபம் வருகிறது.

இதன் அதிபதி சுக்ரன். இதற்குரிய விருட்சம் அத்தி மரம். இந்த ராசிக்காரர்கள் அத்தி மரத்தால் செய்யப்பட்ட லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமை தோறும் வழி பட்டால் செல்வச் செழிப்பு மற்றும் பொருட் சேர்க்கை உண்டாகும். தனிப்பட்ட திறமை மேம்படும்.

சிம்மம் மற்றும் மகர ராசிக்கு 4ம் அதிபதியாய் செவ்வாய் உள்ளது. இதற்குரிய விருட்சம் செவ்வாய் - கருங்காலி மரம். கருங்காலியில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாலும். கொஞ்சம் வேகத்தன்மை கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் இந்த கருங்காலி மாலைகளை அணிந்து கொள்வதும் வீட்டில் கருங்காலி தொடர்பான பொருட்களை வைத்துக் கொள்வதும். திருஷ்டி மற்றும் தோஷங்களை குறைப்பதற்கு வழிவகை செய்யும். ஆனால், சில முடிவுகளை யோசித்து செயல்படுத்துவது நன்மை பயக்கும்.

கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் நான்காம் வீடாக தனுசு மற்றும் மீனம் வருகிறது. இதன் அதிபதி வியாழன். இதற்குரிய விருட்சம் அரசமரம், இந்த மரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது. அதே சமயம், இந்த மரங்கள் வீட்டில் அல்லது சுற்றுப்புறங்களில் இருந்தால் வெட்டவோ அகற்றவோ கூடாது. அவ்வாறு இந்த மரங்களை வெட்டிய வீட்டில் வீடு கட்டினால் அந்த வீடு தோஷம் உடையதாக இருக்கும். இந்த மரங்களில் செய்யப்பட்ட விக்ரஹத்தை வீட்டில் பூஜையில் வழிபட்டால் நன்மைகள் உண்டாக்கும்.

துலாம் மற்றும் விருட்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் பாவகமாக மகரம், கும்பம் ராசியாக வருகிறது. இவர்கள் வன்னிமரத்தில் செய்யப்பட்ட விநாயகரை அல்லது வன்னி மரத்தின் அடியில் உள்ள விநாயகரை வழிபடும்போது சிக்கல்களிலிருந்து விடுபடுவார்கள். பொருளாதார மேன்மைகள் உண்டாகும். உங்களின் திறமைகள் மேம்படும்.