Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிம்மதியான வாழ்வை அருளும் திதிநித்யா தேவியர்

ஒவ்வொரு ராசியையும் மற்றும் நட்சத்திரத்தையும் பூஜிப்பதால் அதற்கான பலன்கள் என்ன என்பது பொதுவாக நமக்கு தெரியும். அதேபோன்று திதி தேவதைகளையும் நாம் பூஜிக்கலாம். தமிழ் மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண மற்றும் சுக்ல பட்சத்தில் (தேய்பிறை - வளர்பிறை) வருகின்ற திதி தேவதைகைளை நாம் பூஜித்தோமெனில் சிறந்த பலன்களை அடையலாம். பஞ்சாங்கத்திலோ அல்லது பூஜை செய்பவர்களையோ கேட்டு என்றென்று எந்தெந்த திதி வருகின்றது என்று அறிந்து கொண்டு பூஜை செய்யுங்கள்.

அமாவாசை -

சுக்ல பக்ஷ ப்ரதமை

காமேஸ்வரி நித்யா

பூரண ஆரோக்யம். நோய்கள் விலகும், மனதில் நிம்மதி. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

சுக்ல பக்ஷ த்விதியை & கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி

பகமாலினி நித்யா

ஜன வசியம். எதிரிகள் அடங்குவர். மக்கட் செல்வம். கர்ப்பரக்ஷை.

சுக்ல பக்ஷ திருதியை & கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி

நித்யக்லின்னா நித்யா

மணவாழ்க்கையில் மகிழ்ச்சி. கணவன், மனைவி, குழந்தைகள் இடையே ஒற்றுமை.

சுக்ல பக்ஷ சதுர்த்தி & கிருஷ்ண பக்ஷ துவாதசி

பேருண்டா நித்யா

நல்ல ஆரோக்யம். நீண்ட ஆயுள். மனதுக்கும் உடம்புக்கும் ரக்ஷை.

சுக்ல பக்ஷ பஞ்சமி & கிருஷ்ண பக்ஷ ஏகாதசி

வஹ்னிவாஸினி நித்யா

வாழ்க்கையில் செழிப்பு. சரீர செழிப்பு, அதிகாரம், புகழ்.

சுக்ல பக்ஷ ஷஷ்டி & கிருஷ்ண பக்ஷ தசமி

மஹாவஜ்ரேஸ்வரி நித்யா

தீய சக்திகள் அழியும். தடங்கல்களும் சிரமங்களும் விலகும்.

சுக்ல பக்ஷ ஸப்தமி & கிருஷ்ண பக்ஷ நவமி

சிவதூதி நித்யா

செல்வம் பெருகும். விரும்பியவை கிடைக்கும். தீயோர் அழிவர்.

சுக்ல பக்ஷ அஷ்டமி & கிருஷ்ண பக்ஷ அஷ்டமி

த்வரிதா நித்யா

செல்வம் பெருகும். ஆரோக்யம் உண்டாகும். கல்வி, கேள்விகளில் சிறப்பு. நீண்ட ஆயுள். கவர்ச்சிகரமான தோற்றம் தரும். செழிப்பான வாழ்க்கை தரும். ஆபத்திலிருந்து காக்கும்.சுக்ல பக்ஷ நவமி & கிருஷ்ண பக்ஷ ஸப்தமி

குலஸுந்தரி நித்யா

பாதுகாப்பு தரும். கல்வியும் செல்வமும் தரும். எதிரிகள் அழிவர்.

சுக்ல பக்ஷ தசமி & கிருஷ்ண பக்ஷ ஷஷ்டி

நித்யா நித்யா

சரீரத்திலும் உள்ளத்திலும் சக்தி பெருகும். அஷ்டமாதி ஸித்திகள் கிடைக்கும்.

சுக்ல பக்ஷ ஏகாதசி & கிருஷ்ண பக்ஷ பஞ்சமி

நீலபதாகா நித்யா

பரீட்சைகளில் நல்ல தேர்ச்சி. வழக்குகளில் வெற்றி,

சுக்ல பக்ஷ துவாதசி & கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி

விஜயா நித்யா

எடுத்த கார்யங்களில் எல்லாம் வெற்றி.

சுக்ல பக்ஷ திரயோதசி & கிருஷ்ண பக்ஷ திருதியை

ஸர்வமங்களா நித்யா

எல்லா கார்யங்களிலும் வெற்றி. மங்களம் உண்டாகும். ஆபத்திலிருந்து காக்கும்.

சுக்ல பக்ஷ சதுர்த்தசி & கிருஷ்ண பக்ஷ துவிதியை

ஜ்வாலாமாலினி நித்யா

பண லாபம். குடும்பத்தில் மகிழ்ச்சி. விரோதிகள் அழிவர்.

பௌர்ணமி & கிருஷ்ண பக்ஷ பிரதமை

சித்ரா நித்யா

பெரும் செல்வம். அதிகாரம். பதவி.

மேற்கூறிய திதி தேவதைகளை நாம் காண நங்கநல்லூரில் தில்லை கங்கா நகரில் உள்ள ஸர்வமங்களா ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத்தில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.