Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை

இன்றைக்கு திருமணத்தடை மற்றும் தாமதத்தினால் வருத்தப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜாதகம், ஜோதிடம் என்று நம்புவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது ஜோதிடம் என்பது முழுமையான கணக்கீடு. குறிப்பாக, திருமணத்தடை மற்றும் தாமதம் இரண்டுக்கும் செவ்வாய் தோஷம் காரணமாக சொல்லப்படுகிறது.

ஜாதக சந்திரிகை என்ற நூலில், ஜென்ம லக்னத்திலிருந்து, செவ்வாய் தோஷம் பிறப்பு லக்னம், இரண்டாம் பாவகம், நாலாம் பாவகம், ஏழாம் பாவகம், எட்டாம் பாவகம் மற்றும் பன்னிரெண்டாம் பாவகத்தில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஆனால், இன்று உங்களுடைய அட்சய லக்னத்தில் இருந்து செவ்வாயை கணக்கிட்டால், செவ்வாய் தோஷம் என்பது இருக்காது. உதாரணமாக, உங்கள் ஜனன ஜாதகத்தில், ஏழாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது என்றால், இன்றைய வயதிற்கு உண்டான லக்னத்தை எடுத்துக் கொள்ளும் போது, 3 லக்னங்கள் தள்ளி வரும். அதாவது உங்கள் பிறப்பு லக்னம் தனுசு லக்னமாக இருந்து, 7ல் செவ்வாய் நிற்பதாக வைத்துக் கொண்டால், உங்களுடைய வயதின் லக்னமாக தற்போது கும்ப லக்னம் அட்சய லக்னமாக செல்லும்.

இப்பொழுது உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், தற்போது உள்ள லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் செவ்வாய் இருக்கும். அதாவது ALP லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் செவ்வாய் இருக்கும். இங்கு செவ்வாய் தோஷம் என்பது வேலை செய்யாது. செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாக எண்ணி, தவறான புரிதலோடு, காலத்தையும் நேரத்தையும் வீணாக்கி விடுகிறார்கள். திருமணத் தாமதத்திற்கு இதுவே, மிக முக்கியக் காரணமாகி விடுகிறது. இத்தகைய தவறான புரிதல்களை உணர்த்தும் நோக்கத்தோடு செயல்படுவதே அட்சய லக்ன பத்ததி ஜோதிடமாகும்.

மாறக் கூடியது செவ்வாய் தோஷம்:

நம்முடைய வயதிற்கு தகுந்த இன்றைய காலத்திற்கேற்ப, நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்து, இதில் வரும் பலாபலன்கள் வேறு வேறாக உள்ளது என்று, நவீன காலத்திற்கு ஏற்றபடி நவீன பரிணாம வளர்ச்சியாக, வளரும் லக்னம் அல்லது வயதில் லக்னம் என்று சொல்லக்கூடிய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில், செவ்வாய் தோஷம் என்பதை மாறும் தன்மையுடையது என்று நிரூபணம் செய்து, ஒருவருக்கு பிறக்கும்போது செவ்வாய் தோஷம் இருந்தால், வாலிப வயதிலும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் ALP Astrology Inventor திரு.பொதுவுடை மூர்த்தி அவர்கள்.

செவ்வாய் தோஷம் இல்லை என்றால், பிறகு இவ்வளவு வயது ஆகியும் ஏன் திருமணம் நடக்கவில்லை என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறது, ஆம் சரியான கேள்வி தானே தோன்றியுள்ளது! காரணம் என்னவென்றால் இன்றைய வயதுக்கு அட்சய லக்னமும், கிரக அமைப்புகளும், எதிர்பார்த்த நிலையில் இல்லை. அப்படியிருக்க, தாங்கள் நினைத்துக் கொள்வது செவ்வாய் தோஷமே திருமணத் தடைக்கு முழு முதற் காரணம் என்று கூறுவது தான். உதாரணமாக கால் வலிக்கு காலில் மருந்து தேய்ப்பது மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும். தலையில் மருந்து தேய்ப்பது தீர்வாக இருக்க முடியாது. ஆக இன்றைய வயதுக்குரிய அட்சய லக்னத்திற்கான, கிரக நிலைகளை மிக முக்கியமாக எடுத்துக் கொண்டு சரியான தீர்வை ஆராய வேண்டும்.