தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வையத்து வாழ்வீர்காள் அடியார்க்கும் அடியாரான ஆழ்வாரின் கதை

‘`நம்மீது பக்தியுடன் இருந்தால் அது நம் அருளால் வருவது. பாதை மாறிப் போய்விட்டால் அவன் விதியால் வருவதா? இது என்ன நியாயம்’’ என தாயார் வினவ..

Advertisement

`‘தன்னை மறந்திருப்பவனை நான் என்ன செய்யட்டும்? நன்றாக பாசுரங்கள் பாடித் துயிலெழுப்பியவன், இன்று துயரில் இருக்கிறான். இந்திரிய சுகங்களின் மேல் ஈடுபாடு வந்தபின் நம்மீது பக்தியேது?’’ - பெருமாள்.

`‘போதும். அவன் இயற்றிய ‘திருமாலை’ பாசுரங்களை நீங்களே மெச்சியிருக்கிறீர்கள்! அடியவர்கள் எல்லோரும் ‘திருமாலை அறியாதார் திருமாலை அறியாதார்’ என மணக்க மணக்க புகழாரம் சூட்டினார்கள். இன்று ஏதோ ஊழ்வினை. அதன் விளைவு அவனைத் தெருவில் நிறுத்திவிட்டது’’ என தாயார் வாஞ்சையோடு

கூறினாள்.

‘`இதில் நான் என்ன செய்யட்டும் தேவி?’’

``ஆஹா! என்னிடமே தங்களின் நாடகமா! உலகத்திற்கே தெரியும். தங்களின் அருள் இருந்தால் போதும், எல்லாமும் சாத்தியம்தானென்று. வால்மீகி தொடங்கி ஆயிரம் கதைகள் இங்குண்டு, ஆழ்வார்களில் ஒருவனாக ஆகப்போகிற ஒருவனை இதற்கு மேல் ஆட்டுவிப்பது முறையல்ல’’`‘உத்தரவு தேவி! தேர் நிலையை அடைந்தவுடன், விப்ரரின் நிலை மாறும்’’ அரங்கனின் பொய்யான பணிவு தாயாருக்கு பிடித்திருந்தது. தேர் நிலையை அடைந்தது. அதே நேரம் தேவதேவியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. திண்ணையில் விப்ர நாராயணர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பணிப்பெண் கதவைத் திறக்க, அங்கே ஒரு வைணவர் நின்றிருக்கக் கண்டாள். நெற்றியிலிருந்த திருமண் அவளை வணங்க வைத்தது.

`‘இதோ இந்த பொன்னாலான வட்டிலை தேவதேவியிடம் கொடுக்கச்சொல்லி என் அய்யன் விப்ர நாராயணன் அனுப்பினார். அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள்’’`‘தங்கள் பெயர்?’’`‘அழகிய மணவாளன்’’ பொன்வட்டிலுடன் உள்ளே சென்றாள். நடந்தவற்றை விவரித்தாள். அந்த பொன்வட்டில்ஸ்ரீரங்கத்து கோயிலைச் சேர்ந்தது என்பதும், அதை யாரோ திருடித்தான் தேவதேவியிடம் சேர்த்ததாக பணிப்பெண் மூலமாகத் தகவல் பரவியது. மறுநாள் பொழுது, ஒரு புறம் விடியும் முன்பே அரசர் அனுப்பியதாகக் காவலாளிகள் வந்தனர்.

தேவதேவி, விப்ர நாராயணர், பணிப்பெண் என அனைவரையும் குற்றவாளிகளாக அரசவைக்குக் கொண்டு சென்றனர். தான் யாரிடமும் பொன்வட்டிலைக் கொடுக்கவில்லையென்று விப்ரர் கதறி அழுதபோதும், அரசர் உட்பட யாரும் நம்பத்தயாராக இல்லை. இவர் அடியவர்தான். ஆனாலும் ஒரு பெண்பித்தர் என்ற எண்ணமே அங்கு நிலவியது. அவமானத்தின் உச்சக்

கட்டத்தில் அரங்கனைத் தொழுதார்.

`‘சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்,

மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட்டழுந்து வேனை,

போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து, தன்பால்

ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே?’’

- என பாசுரம் மனதில் ஓடியது.

``உன்னை மறந்தேன். அதனால் என்னை இழந்தேன். உன் திருவுள்ளம் இரங்காதா! என் அரங்கநாதா!’’ என மூர்ச்சையாகி விழப்போனவரை அரங்கனின் அசரீரிக் குரல் நிறுத்தியது. அழகிய மணவாளனாக வந்தது அவர் என்பதை அரசர் முதல் அனைவரும் உணர்ந்து நெகிழ்ந்தார்கள். தேவதேவியும் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டு நம்மவரின் பாதம் தொழுதாள்.

`‘நான் இனி என் வாழ் நாள் முழுமையும் அரங்கனுக்கு மட்டுமல்ல, அவனின் அடியவர்களுக்கெல்லாம் அடியனாக இருப்பேன்’’ என்று நினைத்தார். அன்று முதல் தொண்டரடிபொடி ஆழ்வார் என்று விப்ர நாராயணர் போற்றப்படுகிறார்.

``குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி,

கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு,

உடலெனக் குருகு மாலோ

எஞ்செய்கே னுலகத் தீரே’’

என்ற அவரின் பாசுரம் உணர்த்தும் வழி நடப்போம் உலகத்தீரே!! என்றுகூறி பின்பழகிய பெருமாள் ஜீயர் தன் உபன்யாசத்தை நிறைவு செய்தார்.

கோதண்டராமன்

 

Advertisement

Related News