Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சித்ரா பெளர்ணமி சிறப்புகள்

சித்ரா பெளர்ணமி சித்ர குப்தரின் அருளைப் பெற ஒரு பொன்னான நாள். கர்ம வினைகளை துடைத்து தலை எழுத்தை மாற்ற ஏற்ற நாளாகும். அன்று புனித நதிகளில் நீராடி விரதமிருந்து, தானங்கள் செய்து, சித்ர குப்தரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏழைகளுக்கு உதவுவது போன்ற நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் சித்ர குப்தரின் அருளைப் பெறலாம்.

* சித்ரா பெளர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.

* சித்ரா பெளர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ‘நடவலி’ எனும் கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமானுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும் விதமாக இத்திருவிழா நடந்து வருகிறது.

*குற்றாலத்தில் உள்ள செண்பகாதேவிக்கு சித்ரா பெளர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும் என்றும் கூறப்படுகிறது.

*நாமக்கல் கொல்லிமலை அறப்பணீஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை கோயில் தீர்த்தமான சரபேஸ்வர தீர்த்தத்தில் கலப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

*பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால் அவருக்கு சித்ரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த நாளில் சித்ர குப்தரை வழிபாடு செய்து வணங்கினால் அவர் நமக்கு எளியமுறையில் சிவனருளை அடைய செய்வார் என்பது நம்பிக்கை.

*சித்ரா பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது மிகவும் பிரசித்தி பெற்றதும் சிறப்பு வாய்ந்தது.

*சித்ரா பெளர்ணமி நாளில் சத்ய நாராயண விரத பூஜை மிகவும் விசேஷம்.  ஸ்ரீமஹாவிஷ்ணுவே நாரதரிடம் மனிதர்கள் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபட இப்பூஜையை கூறி அதன்

மகிமைகளை தன் வாய்மொழியாக குறிப்பிட்டுள்ளார்.

*சித்ர குப்தனுக்கென்று தனிக் கோயில் தேனி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ளது. அக்கோயிலுக்குச் சென்று சித்ரகுப்தனை வணங்கி நாம் அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விமோசனம் பெறலாம்.

*சித்ரா பெளர்ணமி நாளில் மாலை பாயசம், இனிப்பு வகைகளையும், சித்ரான்னங்களை படைத்து குடும்பத்துடன் உண்பது நல்ல அன்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.