Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆபத்தான காலங்களை அறிய உதவும் 64வது நவாம்சம்

நவாம்சம் என்றால் என்ன?

மாரகம் அல்லது மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களை தரக்கூடியது 64வது நவாம்சமாகும். 64 நவாம்சம் கர் நவாம்சம் என்று அழைக்கப்படுகிறது. அதன் அதிபதி சித்ரா கிரகம் என்றும் கார நவாம்ஸம் என்றும் அழைக்கப்படுகிறார். காவியமான ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ஒரு கடுமையான அரக்கன் மற்றும் தீமையுடன் தொடர்புடையவன் 64 நவாம்சத்தின் இந்த குறிப்பிட்ட பெயர் அது எவ்வளவு எதிர்மறையாக இருக்கும் என்பதை காட்டுகிறது. 64 நவாம்சம் என்பது கெடுதல் செய்யக்கூடிய இடமாகும். அங்கு எந்த கிரகம் நின்றாலும் கெடுதல்தான் செய்யும்.

64வது நவாம்சம் எவ்வாறு கண்டறிவது?

ஒருவர் மகர லக்னம் என்று வைத்துக் கொள்வோம். லக்னம் உத்திராடம் 4 ஆம் பாதத்தில் நிற்கிறது என்றால், அவரது நவாம்ச லக்னம் மீனம் ஆகும். நவாம்சத்தில் மீன ராசியில் இருந்து 64வது ராசியாக என்ன ராசி வருகிறதோ, அதுவே அவரது 64வது நவாம்சம் ஆகும். அப்படி பார்க்கும்போது, அவருக்கு 64 நவாம்சமாக மிதுனம் வருகிறது. ராசி கட்டத்தில் அவருக்கு மிதுன ராசியில் எந்த கிரகங்கள் இருந்தாலும், நல்ல பலனை செய்யாது. மகர லக்கினத்திற்கு அட்டமாபதியான சூரியன் மிதுனத்தில் கோட்சார ரீதியில் வரும்போது கெடுதலான பலன்கள் நடக்கும். லக்ன அசுப கிரகங்கள் 64வது நவாம்சத்தில் கோட்சாரத்தில் வரும்போது கெடுதலான விஷயங்கள் நடக்கும். இது திசா புத்திக்கு உட்பட்டதாகும். நல்ல தசா நடந்தால், தப்பிக்கலாம். 64வது நவாம்சம் கண்டறிய மிக சுலபமான வழி ஒன்று கூறுகின்றேன்.

நவாம்ச கட்டத்தில் உங்களது லக்னம் எந்த ராசியில் இருக்கின்றது என்று பாருங்கள், அதிலிருந்து 4வது ராசிதான் உங்களது 64 நவாம்சம் ஆகும். உதாரணமாக ஒருவரின் நவாம்ச லக்னம் விருச்சிகம் என்று வைத்துக் கொள்வோம். விருச்சிகத்துக்கு 4வது ராசியான கும்பராசிதான் அவருக்கு 64வது நவாம்சம் ஆகும். இதே போன்று சந்திரனுக்கும் ராசிக்கும் கணக்கிடலாம். சந்திரனுக்கு மட்டுமல்ல பிற கிரகங்களுக்கும் 64வது நவாம்சத்தைக் கணக்கிடலாம். 64வது நவம்ச அதிபதி சனி, ராகு, கேது அல்லது செவ்வாய் ஆகியோருடன் கூடி ஜெனன ஜாதகத்தில் 6, 8, 12ல் இருந்தால், அந்த நபர் தனது பக்கத்தில் ரத்த சம்பந்த உறவினர்கள் இல்லாமல் இயற்கைக்கு மாறான மரணம் அடைகிறார்.

சூரியனிலிருந்து 64வது நவாம்சம், தந்தைக்கும் சந்திரனிலிருந்து 64வது நவாம்சம் தாய்க்கும் செவ்வாயிலிருந்து 64வது நவாம்சம் சகோதரர்களுக்கும் சுக்கிரனிலிருந்து 64வது நவாம்சம் மனைவிக்கும் லக்னம்/ ராசியிலிருந்து 64வது நவாம்சம் ஜாதகருக்கும் கண்டாதி தோஷங்களை ஏற்படுத்தும்.

இதே போல நீங்களும் உங்கள் லக்னம் ராசி மற்றும் பிற கிரகங்களுக்கு 64வது நவாம்சத்தை கண்டறிந்து அவற்றின் மீது எப்போது தீமைகள் கடந்து செல்லும் என்பதை சரிபார்க்கலாம். அந்த காலங்கள், மோசமானவை. குறிப்பாக சனி ராகு மற்றும் கேது போன்ற மெதுவாகநகரும் கிரகங்கள் மிகவும் தீங்கு விளைவிக்கும்.