Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

27 நட்சத்திரக்காரர்கள் வீடு கட்டும் திசையும் நிறங்களும்...

27 நட்சத்திரக்காரர்கள் வீடு கட்ட வேண்டிய திசையும், அடிக்க வேண்டிய நிறங்களும் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

அஸ்வினி

வீடு, கிழக்கு பார்த்தாக அமைய வேண்டும். மனை அல்லது கட்டிடத்தின் அகல அளவு தெற்கு வடக்காகவும் நீளம் அளவு கிழக்கு மேற்காக அமைவது யோகம்.

சிவப்பு கலந்த வர்ணம்,பழுப்பு வெண்மை கலந்த நிறம்,இளம் பச்சை, பொன் நிறம்.

பரணி

இவர்களுக்கு உரிய மனை அல்லது கட்டிடம் தெற்கு நோக்கி இருப்பது நல்லது. கிழக்கு வடக்கு பார்த்தவை கூடாது.

தூய வெண்மை, பழுப்பு வெண்மை,சிவப்பு நிறம், அடர்ந்த சிவப்பு.

கார்த்திகை

வீடு அல்லது கட்டிடம் தெற்கு முகம் உள்ளதாக இருக்க வேண்டும். வடக்கு முகத் தலைவாசல் கூடாது.

இள மஞ்சள், சிமெண்ட் நிறம்,இளஞ் சிவப்பு.

ரோகிணி

தெற்கு அல்லது மேற்கு நோக்கி வாசல் கொண்டவை சிறப்பு. வடக்கு கிழக்கு நோக்கி கட்டிடம் கூடாது.

சிவப்பு, மங்கலான வெண்மை,இளம் பச்சை, பொன் நிறம்.

மிருகசீரிஷம்

மனை கட்டிடம் மேற்கு நோக்கி இருப்பது நல்லது. அகலம் - வடக்கு தெற்கு, நீளம் - கிழக்கு மேற்கு.

தூய வெண்மை, இளம் பச்சை,மங்கலான வெண்மை, இளம் சிவப்பு.

திருவாதிரை

வடக்கு மேற்கு மனை கட்டிடம்

இருப்பது நல்லது.இளம் மஞ்சள், சிமெண்ட் நிறம்,இளம் சிவப்பு.

புனர்பூசம்

வடக்கு பார்த்த மனைவாசல் அதிர்ஷ்டம் தரும்.

சிவப்பு, மங்கலான வெண்மை,இளம் பச்சை, பொன்னிறம்.

பூசம்

வடக்கு பார்த்த மனை கட்டிடம் சிறப்பை தரும்.

இளம் சிவப்பு, இளம் பச்சை,மங்கலான வெண்மை.

ஆயில்யம்

கிழக்கு முக மனை அதிர்ஷ்டம் தரும்

இளம் மஞ்சள், இளம் சிவப்பு,பழுப்பு நிறம், வெண்மை.

மகம்

தெற்கு அல்லது மேற்கு வாசல் கொண்ட கட்டிடங்களை ஏற்படுத்தவும்.

சிவப்பு, வெண்மை,இளம் பச்சை, இளஞ்சிவப்பு.

பூரம்

தெற்கு பார்த்த மனை அல்லது தெற்கு தலைவாசல் சிறப்பான யோகம் தரும்.

மங்கலான வெண்மை,பல கலர் கலந்த வர்ணம்,பொன்னிறம்.

உத்திரம்

தெற்கு பார்த்த கட்டிடம், மனைகட்ட வேண்டும். மேற்கு மனைவாசலும் நன்றாக இருக்கும்.

இளமஞ்சள், இளம் சிவப்பு,பழுப்பு நிறம், இள வெண்மை.

அஸ்தம்

மேற்கு பார்த்த மனை கட்டிடம் வாசல்தான் யோகம் தரும்.

சிவப்பு, வெண்மை,இளம் பச்சை, மங்கலான சிவப்பு.

சித்திரை

வடக்கு அல்லது மேற்கு முகம் மனை கட்டிடமும், வடக்கு அல்லது மேற்கு பார்த்த தலைவாசலும் நன்மை தரும்.

மங்கலான வெண்மை,பல கலர் கலவை,கருநீலம், பொன் நிறம்.

சுவாதி

வடக்கு பார்த்த மனை வாசல் மிகவும் யோகம்.

மஞ்சள் கலந்த வர்ணம், இளம் சிவப்பு,பழுப்பு நிறம், தூய வெண்மை.

விசாகம்

வடக்கு அல்லது கிழக்கு பார்த்த மனைவாசல் சிறப்பு.

சிவப்பு, வெண்மை,பச்சை, வெளிர் சிவப்பு.

அனுஷம்

கிழக்கு பார்த்த கட்டிடம் மனை வாசல்தான் யோகம்.

மங்கலான வெண்மை, பல கலர் வெண்மை, கருநீலம், பொன் நிறம்.

கேட்டை

தெற்கு அல்லது கிழக்கு முக மனையை தேர்ந்தெடுக்கவும். கிழக்கு அல்லது தெற்கு பார்த்து கட்டிடம் கட்டலாம்.

மஞ்சள், மங்கலான சிவப்பு, பழுப்பு.

மூலம்

தெற்கு முக மனை வாசல் கொண்ட கட்டிடங்களை ஏற்படுத்தவும்.

சிவப்பு நிறம், வெண்மை நிறம்,இளம் பச்சை நிறம்,இளஞ்சிவப்பு நிறம்.

பூராடம்

தெற்கு அல்லது மேற்கு பார்த்த மனையை கட்டுங்கள்.

மங்கலான வெண்மை, பல நிறம்,கரு நீலம், பொன் நிறம்.

உத்திராடம்

மேற்கு முகமான மனைகளும், மேற்கு முக கட்டிடங்களும் அதிர்ஷ்டத்தை தரும்.

மஞ்சள் நிறம், இளஞ்சிவப்பு,பழுப்பு நிறம், வெண்மை.

திருவோணம்

வடக்கு அல்லது மேற்கு பார்த்த மனை கட்டிடங்கள் லாபம் தரும்.

சிவப்பு, வெண்மை,இளம் பச்சை, இளஞ்சிவப்பு.

அவிட்டம்

வடக்கு பார்த்த மனை கட்டிடம், வடக்கு பார்த்தவாசல் யோகம் மிக அதிகம் தரும்.

மங்கலான வெண்மை, பல நிறம்,கரு நீலம், பொன்நிறம்.

சதயம்

வடக்கு அல்லது கிழக்கு பார்த்த மனை அல்லது கட்டிடம் நன்மை தரும்.

இள மஞ்சள், இளஞ்சிவப்பு,பழுப்பு நிறம், வெண்மை.

பூரட்டாதி

கிழக்கு முக மனை கிழக்கு பார்த்த தலைவாசல் கொண்ட கட்டிடமும் அதிர்ஷ்டத்தை தரும்.

சிவப்பு, வெண்மை,இளம் பச்சை, வெளிர் சிவப்பு.

உத்திரட்டாதி

தெற்கு அல்லது கிழக்கு முகமான மனைகளை தேர்ந்தெடுப்பதும் தெற்கு அல்லது கிழக்கு பார்த்த தலைவாசல் வைத்து கட்டிடம் கட்டுவது மிகமிக யோகம் தரும்.

மங்கலான வெண்மை, பல நிறம்,கரு நீலம், பொன் நிறம்.

ரேவதி

தெற்கு முகமான மனையும் தெற்கு பார்த்த தலைவாசல் உள்ள கட்டிடமும் செல்வச் செழிப்பு தரும்.

இளம் மஞ்சள், சிவப்பு, பழுப்பு.