Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மங்கள சின்னத்தின் சூட்சும ரகசியங்கள்

விநாயகரின் மங்கள சின்னமாக ஸ்வஸ்திக் திகழ்கிறது வெற்றியைத் தேடித் தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும். லட்சுமியின் பாதத்தில் உள்ள 10 சின்னங்களில் ஸ்வஸ்திக் சின்னமும் ஒன்று லட்சுமியின் வலது பாதத்தில் காணப்படும் ஸ்வஸ்திக் ஞானம் மற்றும் வளத்தை குறிக்கிறது.செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக் ஆகும். ஸ்வஸ்திக் என்றால் தடையற்ற நல்வாழ்வு என்பது பொருள். இதிலுள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிக்கும் எட்டு திசை களிலும் நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாக சொல்வதுண்டு சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருக்கிறது.

1 லட்சம் போவிஸ் அலகுகள் கொண்ட மின்சக்தி ஸ்வஸ்திக் சின்னத்தில் உள்ளது மேற்படி மின்சக்தி நேர்மின் சக்தி அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். ஸ்வஸ்திக் சின்னம் பாதுகாப்பு தருபவை தன ஆகர்ஷணம் செய்பவை வடநாட்டினர் அனைவரும் தம் வணிக ஸ்தலங்களில் ஸ்வஸ்திக் சின்னத்தை மஞ்சளால் வரைந்து எழுதி வைப்பதையும் கணக்குப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் வரைந்து வைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.வீட்டு வாசல்கள் பொன் பொருட்கள் வைக்கும் இடம் பணப்பெட்டி கல்லாப்பெட்டி கணக்கு மற்றும் குறிப்பேடுகள் வழிபாட்டிடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுத்தலாம். ஸ்வஸ்திக் சின்னத்தை வாசல் கதவின் உள்பக்கமோ வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்ட சக்தியை நுழையவிடாமல் காக்கும். வீட்டின் உட்புறம் சுவர்களின் மத்தியில் சுமார் 7 அடி உயரத்தில் ஸ்வஸ்திக் ஸ்டிக்கர்களை ஒட்டி வைக்க வேண்டும்.

ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு வரையலாம். இதனை பூஜை அறை வாசலில் கோலமாக இடுவர். ஸ்வஸ்திக் கோலம் போட காரணம் ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் வைக்கப்படும் புள்ளி நம் ஆத்மா. வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது.

பிள்ளைகள் நன்றாக படிக்க...

பிள்ளைகள் படிக்கும் அறையில் பிள்ளைகளின் பார்வை படும்படி சுவற்றில் ஸ்வஸ்திக் ஸ்டிக்கரை ஒட்டி வைக்க வேண்டும். பிள்ளைகளின் லக்னத்திற்கு உண்டான அதிர்ஷ்ட நிறங்களில் ஸ்வஸ்திக் சின்னம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறமுடியும்.