முதல் படை வீடு - திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு ‘அல்லல் போக்கும் விநாயகர்’ வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் துன்பத்தைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.இரண்டாம் படை வீடு-விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோயிலில் ‘ஆழத்துப் பிள்ளையார்’ என்ற பெயரில் இவர்
காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரை தரிசனம் செய்ய வேண்டும்.
மூன்றாவது படை வீடு-திருக்கடையூர் அபிராமி கோயில். இங்குள்ள ‘கள்ளவதணை பிள்ளையார்’ நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தருபவர். அபிராமிப் பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.நான்காம் படை வீடு-மதுரை மீனாட்சியம்மன் கோயில். இங்கு சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார். அம்மன் சந்நதிக்கு செல்லும் வழியில் உள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார்.
ஐந்தாம் படை வீடு-பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். இவர் சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் கேட்ட வரம் தரும் கற்பக விருட்சமாகத் திகழ்கிறார்.
ஆறாம் படை வீடு-பொள்ளாப் பிள்ளையார் கோயில். இது திருநாரையூரில் அமைந்துள்ளது. ‘பொள்ளுதல்’ என்றால் ‘செதுக்குதல்.’ உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப் பெயர் மருவி ‘பொள்ளாப் பிள்ளையார்’ என்று மாறிவிட்டது.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.


