Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலையில் மகாசிவராத்திரி விழா

உலகில் மக்கள் வணங்கும் தெய்வங்களுக்கெல்லாம் பெருந்தெய்வமாக இருப்பவர் சிவபெருமான் அதனால் அவர் மகாதேவர் எனப்படுகிறார். மகாதேவரான சிவபெருமான் ஆராதிப்பது ஒன்றே இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவதாகும். மகாதேவரை வணங்க காலம் நேரம் நியதி எதுமே இல்லை என்றாலும் ஆகமங்களும் ஆன்றோர் மொழிகளும் சிறந்த ஒழுக்கமான வழிபாட்டையும் பூசை முறைகளையும் வகுத்துத் தந்துள்ளன. அவற்றின் உணர்ந்து அவற்றின் வழியே சிவபெருமான் ஆராதித்தால் உயர்ந்த பயன் எளிதில் பெறலாம். இத்தகைய நூல்களில் (சிவராத்திரி விரதமும் பூசையுமே பல நூறு பூஜை.. விரதங்களும் சொல்லாம்.

சிவராத்திரி இரவில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீது அமர்ந்து கொண்டு தூங்கி விடாமல் இருக்க இலைகளைப் பறித்துப் போட்டவாறு இருந்த பின் ஒருவேடன். அந்த மரத்தின் கீழ் சிவலிங்கம் இருந்தது. அவன் பறித்து போட்டுக் கொண்டிருந்த இலைகள் சிவலிங்கத்தின் மீது விழுந்தவாறு இருந்தன. அவன் தாகம் எடுக்கும்போது அருந்திய நீர் வாயில் இருந்து வழிந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது. பெருமான் அவற்றை அபிஷேகமாகவும், அர்ச்சனையாகவும் ஏற்று அருள்புரிந்தார்.

இத்தகைய அனேக வரலாறுகள் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. (சிவராத்திரியின் மகிமைகள் விளக்கும்)எல்லோரும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வம் சாற்றி வழிபட வேண்டும் என்ற நோக்கில் சென்னை மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் அமைந்துள்ள வாணியர் தருமபரிபாலன மண்டபத்தில் சிவராத்திரி நாளில் மரகதப்பச்சை மகாதேவ லிங்கமும் ஸ்ரீ சொர்ண கால பைரவரும் எழுந்தருளி வைக்கப்பட்டு விழா நடைபெறுகிறது.

அன்று மாலை ஸ்ரீ ருத்தரபாராயண அபிஷேகத்துடன் தொடங்கி நான்கு கால பூஜைகள், பைரவர் அமுது படையல் போன்றவை சிறப்பாக நிகழும் சென்ற ஆண்டு ஏறத்தாழ 2000 பேர் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வம் சாற்றி வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மாலை 4 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணி வரை நிகழும் இந்த வழிபாட்டில் வேதபாராயணம், திருமுறை இசை. திருவாசகமுற்றோதல், மூன்றாம் காலத்தில் நெய் அபிஷேகம் போன்றவை நிகழும். அன்றைய நாளில் பிரசாதமும் வழங்கப்படும்.

கிருஷ்ணா