பழங்கால ஆலயங்களிலிருந்து அழகன் முருகனின் எழில் சிற்பங்கள்
ஆடிக் கிருத்திகை - சிறப்பு ஒளிப்படங்கள்
*மயில் மீது கார்த்திகேயன்
அமைவிடம்: வாரணாசி, உத்திரப்பிரதேசம்.
காலம்: பொ.ஆ.4-5ஆம் நூற்றாண்டு, குப்தர் காலம்.
*ஆனை மேல் அழகன்
அமைவிடம்: ஆனாங்கூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டு, முற்கால பல்லவர்.
*முருகன் வலக்கையில் வஜ்ராயுதம்.
இடது பின் கையில் சேவல், வலது கால் அருகில் மயில்.
அமைவிடம்: பையூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: பொ.ஆ. 6-7ஆம் நூற்றாண்டு, முற்கால பல்லவர்.
*முருகன் - சன்ன வீரம் அணிந்து யானை மீதமர்ந்த கோலம்
ஆலயம்: மூவர் கோயில், கொடும்பாளூர், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: வேளிர் குல சிற்றரசர் பூதி விக்கிரம கேசரி (பொ.ஆ. 10-ஆம் நூற்றாண்டு).
*பத்மாசன (யோக) நிலையில் அமர்ந்துள்ள முருகன்
ஆலயம்: இரட்டைக் கோயில்கள், கீழையூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: பொ.ஆ.9ஆம் நூற்றாண்டின் இறுதி - 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம்.
*முருகன் - கோஷ்டச் சிற்பம்.
ஆலயம்: பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: முதலாம் ராஜேந்திர சோழன் (பொ.ஆ.1014-1044).
*நான்கு கரங்களுடன் அழகன் - கோஷ்டச் சிற்பம்.
ஆலயம்: சித்தேஸ்வரர் கோயில், முக்தேஸ்வரர் ஆலய வளாகம், புவனேஸ்வரம், ஒடிசா மாநிலம்.
காலம்: அரசர் முதலாம் யயாதி, சோமவன்ஷி வம்சம் (பொ.ஆ.950-975).
*நின்ற நிலை பேரழகு முருகன்.
ஆலயம்: இரட்டைக் கோயில்கள், கீழையூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: பழுவேட்டரையர் சிற்றரசர்கள் குமரன் கண்டன் மற்றும் குமரன் மறவன், 9ஆம் நூற்றாண்டின் இறுதி - 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம்.
*மயில் மீதமர்ந்த ஆறுமுகன்.
ஆலயம்: அண்ணாமலையார் கோயில், ராஜ கோபுரம் (கிழக்கு வாசல்), திருவண்ணாமலை, தமிழ்நாடு.
காலம்: விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரால் பொ.ஆ.1516ல் துவக்கப்பட்டு, தஞ்சாவூர் நாயக்க ஆட்சியாளர் செவப்ப நாயக்கரால் பொ.ஆ.1590ல் கட்டி முடிக்கப்பட்டது.
*தோரணத்தில் மயில் மீதமர்ந்த முருகன்.
ஆலயம்: அண்ணாமலையார் கோயில், ராஜ கோபுரம் (கிழக்கு வாசல்), திருவண்ணாமலை, தமிழ்நாடு.
காலம்: விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரால் பொ.ஆ.1516ல் துவக்கப்பட்டு, தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர் செவப்ப நாயக்கரால் பொ.ஆ.1590ல் கட்டி முடிக்கப்பட்டது.
*பன்னிரு கரங்களுடன் ஆறுமுகன்.
அமைவிடம்: சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு.
காலம்: தற்போதைய வடிவத்தில் உள்ள கோயில், ஆரம்பகால பாண்டியர்கள், சோழர்கள், முத்தரையர்கள், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் தொண்டைமான்கள் போன்ற பல்வேறு அரச வம்சங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விரிவாக்கங்களின் விளைவாகும்.
*அழகு மயில் மேல் ஆறுமுகன்.
ஹொய்சாளேஸ்வரர் ஆலயம், ஹளபேடு, கர்நாடக மாநிலம்.
காலம்: பொ.ஆ. 1121-1160, விஷ்ணுவர்த்தனன்.


