Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஸர்வமங்களாவும் நவராத்திரி உற்சவமும்

அம்பாள் அருளால் ஆன்மிகமும்,

அமைதியும், வளமும் பெருகட்டும்!

சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகரில் அருளும் ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் நவராத்திரி உற்சவம், இவ்வாண்டு 10.10.2026 சனிக்கிழமை முதல் 21.10.2026 புதன்கிழமை வரை பக்தி மற்றும் ஆன்மிகச் சிறப்புடன் நடைபெற உள்ளது.நவராத்திரி என்பது அம்பிகையின் பல்வேறு திருவுருவங்களை வழிபட்டு, மன அமைதி, ஆன்மிக முன்னேற்றம் மற்றும் குடும்ப நலனைப் பெறுவதற்கான புனிதமான காலமாகும். இந்த உற்சவத்தில் தினந்தோறும் ஸ்ரீ சக்ர நவாவரண பூஜைகள், பல்வேறு ஹோமங்கள், சிறப்புப் பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற உள்ளன.

சிறப்பு தொடக்க நிகழ்ச்சி

10.10.2026 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, நவராத்திரி உற்சவத்தின் தொடக்கமாக ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், கலச ஸ்தாபனம் மற்றும் அங்குரார்ப்பணம் நடைபெறும்.

விநாயகப் பெருமானை வழிபட்டு தடைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம் மதியும் நிலைத்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டி இந்த ஹோமம் நடைபெறுகிறது.

தினந்தோறும் நவாவரண பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்கள்

11.10.2026 முதல் 19.10.2026 வரை, தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளை களில் ஸ்ரீ சக்ர நவாவரண பூஜைகளுடன் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

11ம் தேதி ஸ்ரீ வித்யா ஹோமம் மற்றும் ஸ்ரீ காளி ஹோமம், 12ம் தேதி ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஹோமம் மற்றும் ஸ்ரீ தாரா ஹோமம் நடைபெறும்.

13ம் தேதி ஸ்ரீ ஸத்குரு ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ குருபாதுகா பூஜையும், காலை 9 மணிக்கு ஸத்குரு ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகள் ஜயந்தி உற்சவமும் நடைபெறும். தொடர்ந்து ஸ்ரீ குருமண்டல ஹோமம் மற்றும் ஸ்ரீ ஷோடசி ஹோமம் நடைபெற உள்ளன.

14ம் தேதி ஸ்ரீ லலிதா த்ரிசதி ஹோமம் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம், 15ம் தேதி ஸ்ரீ அன்னபூர்ணா ஹோமம் மற்றும் ஸ்ரீ சின்னமஸ்தா ஹோமம், 16ம் தேதி  ஸ்ரீ நகுலிவித்யா ஹோமம் மற்றும் ஸ்ரீ த்ரிபுரபைரவி ஹோமம் நடைபெறும்.

17ம் தேதி த்ருஷ்டி துர்கா, சாந்தி துர்கா, சூலினி துர்கா மற்றும் ஸ்ரீ தூமாவதி ஹோமங்கள் நடைபெறுகின்றன. 18ம் தேதி ஸ்ரீ மஹாவாராஹி மற்றும் ஸ்ரீ பகளாமுகி ஹோமங்களும், 19ம் தேதி ஸ்ரீ மாதங்கி மற்றும் ஸ்ரீ கமலாத்மிகா ஹோமங்களும் நடைபெறும். இந்த சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெறலாம்.

ஸ்ரீ மஹா சண்டி யாகம்

நவராத்திரி உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 20.10.2026 செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு ஸ்ரீ மஹா சண்டி யாகம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெறும். சக்தி வழிபாட்டின் சிறப்புமிக்க இந்த யாகத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பிகையின் அருளைப் பெறலாம். குடும்ப நலம், மனஅமைதி, ஆரோக்யம், நம்பிக்கை மற்றும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் வேண்டி இந்த யாகம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருத்தேர் மற்றும் அன்னதானம்

நவராத்திரி உற்சவத்தின் நிறைவு நாளான 21.10.2026 புதன்கிழமை, காலை 8 மணிக்கு திருத்தேர் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.

நவராத்திரி நாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஹம்ஸம், ரிஷபம், கருடன், கிளி, மயில், யானை, சிறிய தேர், சிம்மம், சந்திரப்ரபை, சூர்யப்ரபை மற்றும் குதிரை போன்ற வாகனங் களில் அம்பாளின் திருவீதியுலா சிறப்பாக நடைபெறுகிறது.

ஹோமங்களின் ஆன்மிகச் சிறப்பு

நவராத்திரி காலத்தில் நடைபெறும் ஸ்ரீ சக்ர நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ ஸுக்த ஹோமம், புருஷஸுக்த ஹோமம் மற்றும் தசமஹாவித்யா ஹோமங்கள் ஆகியவை ஆன்மிக ரீதியாக சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி, அன்னபூர்ணா, புவனேஸ்வரி, மஹாவாராஹி, மாதங்கி, கமலாத்மிகா உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், அந்தந்த தெய்வ அம்சங்களின் அருளைப் பெறும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன.இந்த வழிபாடுகள் மன அமைதி, குடும்ப நலம், ஆரோக்யம், கல்வி முன்னேற்றம், செல்வ வளம், தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம், ஆன்மிக வளர்ச்சி ஆகியவற்றை வேண்டி பக்தர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

அனைவரும் கலந்து கொள்ள அன்பான அழைப்பு

பக்தி, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் இந்த நவராத்திரி உற்சவத்தில், பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு அனைத்துச் சிறப்புப் பூஜைகள், ஹோமங்கள், யாகங்கள் மற்றும் திருத்தேர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாளின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

“அம்பாள் அருள் இருக்கும் இடத்தில் அச்சம் இல்லை;

அவள் அருள் நிறைந்த இல்லத்தில்

நிம்மதிக்கும் வளத்திற்கும் குறைவில்லை.

குடந்தை நடேசன்