Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சமயத்தில் வந்தருள்வாள் சமயபுரத்தாள்

சமயபுரமும் பூச்சொரிதலும்

ஸ்ரீ அம்பாள் துதி

``செய்த தறியேன் சிக்கெனப்

பிடித்தேன் தேவி கௌமாரியம்மா

மெய்யாய் உனைநான் திருதாள் பணிந்தேன் திருவேவைணவியே

பொய்யா வரவருள் பழமலை நாயகி பார்வதி பைரவியே

ஜெய! ஜெய! சமயபுரவளர் நாயகி துக்க நிவாரணி மகமாயி’’

முக்திக்கிடமாகிய சச்சிதானந்த ஜோதி பிரகாசத் திருவருளை முன்னிட்டு, பரிபூரண அனுக்கிரஹத்துடன் நிகழும் 08.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் விரத நோன்பு ஆரம்பமாகி, புஷ்பங்களால் பூச்சொரியல் என்னும் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, மேள தாள வாத்திய கோஷ்டிகளுடன் புறப்பட்டு, மாரியம்மனுக்கு உதிரிப் புஷ்பங்களால் பூச்சொரியல் கைங்கர்யம் நடைபெறும். இதனை தொடர்ந்து அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெறும்.சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பரிபூர்ண அருளால், கடந்த 49 வருடங்களாக பூச்சொரிதல் விழாவிற்கு வெளியூரிலிருந்து வந்து கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவரும், நலமுடன் அம்மன் அருளைபெற்று பல முன்னேற்றங்கள் பெற்று, மனதிருப்தியை அடைந்தனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.07.03.2026 சனிக் கிழமை காலை சுமார் 10.00 மணி அளவில், ஸ்ரீ மாரியம்மனுக்கு வஸ்திரங்கள் சமர்பிக்கப்படும். இதில் விருப்பமுள்ளவர்கள் கலந்துக் கொள்ளலாம். இந்த வருடம் ஐம்பதாவது ஆண்டினை முன்னிட்டு, 07.03.2026 சனிக் கிழமை அன்று சுமார் 5.00 மணி அளவில், 108 சுமங்கலிகளை கொண்டு குத்து விளக்கு பூஜை மிக சிறப்பான முறையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.