Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

நாம் அனைவருமே நம்மை அறியாமல் நமது சக மனிதருக்கும் பிற உயிர்களுக்கும் தீங்கு செய்து விடுகிறோம். அதனால் அந்த பிற உயிர்களின் மனவருத்தத்தால் நமக்கு சாபம் ஏற்பட்டுவிடுகிறது. இப்படி நாம் அறிந்தும் அறியாமலும் ஏற்படும் சாபங்களை நீக்க “சிவனுக்குரிய” இந்த ஸ்லோகத்தை மனதார சொன்னால் அவை போய்விடும். அதுவும் இந்த ஸ்லோகத்தை பிரதோஷத்தன்று சொன்னால் நல்லது.

பிரதோஷ மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே

அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

இம்மந்திரத்தை மாதத்தில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களிலும் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து விட்டு சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி சிவ பெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது 9 முறை அல்லது 11 முறை கூறி வழிபட வேண்டும். பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு உங்களை அறியாமல் செய்த தீங்கினால் உங்களுக்கு மனதளவில் கொடுக்கப்பட்ட சாபங்கள் நீங்கும்.

பொதுவாக சிவபெருமானை வழிபடுவதற்கு எல்லா நாட்களும் சிறந்த நாட்கள் என்றாலும், அந்த சிவ பெருமானுக்கே உரிய “பிரதோஷம்” தினத்தன்று சிவனையும், அவரின் வாகனமான “நந்தி” தேவரையும் வணங்குவது பல நன்மைகளை அள்ளி தரும் என்பது நம்பிக்கை.

அத்துடன் பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.

பிரதோஷ நேரம் என்பது பொதுவாக மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரை என்று கூறப்படுகிறது. இந்த காலத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான மயக்க நிலையில் இருக்கும். ஏனெனில் இந்த பிரதோஷ நேரத்தில் தான் உலகை காக்க சிவ பெருமான் “ஆலகால விஷத்தை” அருந்தியதாக ஐதீகம். எனவே இக்காலத்தில் சிவ பெருமானின் வாகனமான “நந்தி” தேவருக்கு அருகம்புல், பூக்கள் மற்றும் சந்தனம் சாற்றி பூஜை செய்து அவரிடம் நமது கோரிக்கையை வேண்டிக்கொண்டால், நமது விருப்பங்கள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை.