Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பழங்கால ஆலயங்களிலிருந்து பிள்ளையார் சிற்பங்கள்

(பல்லவர், சோழர், ஹொய்சாளர்)

சிற்பமும் சிறப்பும்

காலம்: பொது ஆண்டு (கி.பி)  4-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டது.

சிறப்பு: இச்சிற்பம் தமிழகத்தின் மிகப் பழமையான விநாயகர் சிற்பங்களில் ஒன்றாக வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது.

ஆலகிராமம் பிள்ளையார்:

தமிழ்நாட்டின் தொன்மையான விநாயகர் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு என்பது பல்லவர் காலத்தில் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்ற ஒரு பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால், விழுப்புரம் மாவட்டம் ஆலகிராமத்தில் கண்டறியப்பட்ட விநாயகர் சிற்பம், இந்த வரலாற்றை மாற்றி அமைத்து, பல்லவர்களுக்கு முன்பே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்ததை உறுதிப்படுத்துகிறது.

காலத்தால் முந்தையவர்:

தமிழகத்தின் மூத்த விநாயகர் என்று நீண்டகாலமாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கருதப்பட்டு வந்தார். இருப்பினும், திண்டிவனம் வட்டம் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிற்பம், பிள்ளையார்பட்டி சிற்பத்தில் உள்ள எழுத்து அமைதிக்கும் முந்தையது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கல்வெட்டுச் சான்றுகள்:

இங்குள்ள பலகைக்கல்லில் தமிழ் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.``உள்ள பிரமிறை பன்னூற சேவிக... மகன் கிழார் கோன்... கொடுவித்து’’ என்ற வரிகள் இந்தச் சிற்பத்தின் பழமையையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகின்றன.

சிற்ப அமைப்பு மற்றும் தோற்றம்

இந்த மூத்த பிள்ளையார் சிற்பம் மிகவும் தனித்துவமான கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.அளவு: 75 செ.மீ உயரமும், 40 செ.மீ அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது.

அமர்ந்த நிலை: பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

கரங்கள்: இரண்டு கரங்கள் மட்டுமே உள்ளன. வலது கரத்தில் தடி ஆயுதமாகவும், இடது கரத்தில் ஒடித்த தந்தமும் காணப் படுகின்றன.

அலங்காரம்: மார்பில் புரிநூல், காலில் தண்டை, கைகளில் காப்பு மற்றும் தோளில் கடகம் அணிந்துள்ளார்.

மகுடம்: இவரது தலையலங்காரம் ஒரு பூக்கூடையைக் கவிழ்த்து வைத்தது போன்ற தனித்துவமான அமைப்பில் உள்ளது.

தனிச் சந்நதி: முன்பு அர்த்தமண்டபத்தில் இருந்த மூத்த விநாயகர், தற்போது கோயில் புதுப்பிக்கப்பட்ட பிறகு தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார்.

அருள்மிகு எமதண்டீஸ்வரர் திருக்கோயில்,ஆலகிராமம், திண்டிவனம் வட்டம்,விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.

2. அல்லூர் பசுபதீஸ்வரர் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.முதலாம் பராந்தக சோழன்.

3. வைத்தீஸ்வரர் திருக்கோயில், சிந்தாமணி நல்லூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.

காலம்: விக்கிரம சோழன் (முதலாம் குலோத்துங்க சோழனின் மகன்) பொ.ஆ 1127.

4. ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம், தஞ்சாவூர் மாவட்டம்.

காலம்: இரண்டாம் ராஜராஜசோழன், பொ.ஆ.12 ஆம் நூற்றாண்டு.

5. பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

காலம்: முதலாம் ராஜேந்திர சோழன் (பொ.ஆ 1020 - 1030).

6. பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

காலம்: முதலாம் ராஜேந்திர சோழன் (பொ.ஆ 1020 - 1030).

7. ஹொய்சாளேஸ்வரர் கோயில், ஹளபேடு, கர்நாடக மாநிலம்.

காலம்: ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனன், பொ.ஆ.1121-1160.

8. ஹொய்சாளேஸ்வரர் கோயில், ஹளபேடு, கர்நாடக மாநிலம்.

காலம்: ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனன், பொ.ஆ.1121-1160.

9. உமா மகேஸ்வரர் கோயில், கோனேரிராஜபுரம், மயிலாடுதுறை மாவட்டம்.

காலம்: செம்பியன் மாதேவியார் - கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, பொ.ஆ.910-1001

10. சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

காலம்: 15-16ஆம் நூற்றாண்டு, விஜயநகரப் பேரரசு.

11. குடைவரைக் கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

12. திருமூலநாதர் கோயில், பேரங்கியூர், விழுப்புரம் மாவட்டம்.

காலம்: பராந்தக சோழன், 10-ஆம் நூற்றாண்டு.

13. மத்யார்ஜுனேஸ்வரர் கோயில், பெட்டவாய்த்தலை, திருச்சி மாவட்டம்.

காலம்: மூன்றாம் குலோத்துங்கன், பொ.ஆ.1178-1218.

14. மத்யார்ஜுனேஸ்வரர் கோயில், பெட்டவாய்த்தலை, திருச்சி மாவட்டம்.

காலம்: மூன்றாம் குலோத்துங்கன், பொ.ஆ.1178-1218.

15. அபிராமேசுவரர் திருக்கோயில், திருவாமாத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

காலம்: முதலாம் பராந்தக சோழன், பொ.ஆ. 907-953.

16. அபிராமேசுவரர் திருக்கோயில், திருவாமாத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

காலம்: முதலாம் பராந்தக சோழன், பொ.ஆ. 907-953.

17. கையில் கரும்புடன் கணபதி அபிராமேசுவரர் திருக்கோயில், திருவாமாத்தூர், விழுப்புரம் மாவட்டம்.

காலம்: முதலாம் பராந்தக சோழன், பொ.ஆ. 907-953.

18. சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.

19. ஜம்புகேஸ்வரர் கோயில், திருவானைக்காவல், திருச்சி மாவட்டம்.

20. சிதிலமடைந்த பெருமாள் கோயில், கப்பூர், விழுப்புரம் மாவட்டம்.

மது ஜெகதீஷ்