இந்தியத் தேசம் முழுக்க பல கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயில்களுக்கும் தல வரலாறு ஒவ்வொன்று உண்டு. மேலும், ஒரு கோயில் என்பது இயற்கையால் நிர்வகிக்கப்படுகின்றது என்பதை அறியாமலே நம்மால் உந்தப்பட்டு அந்த கோயிலை நிர்வகிக்கிறோம் என்பதே நிஜம்.
அந்த கோயிலுக்குள் ஆவாகணமாகும் (எழுந் தருளியிருப்பது) தேவதையின் நாமம் கண்டிப்பாக கிரகங்களின் ஆளுமைக்குள் இருக்கும். அந்த நாமமே அந்த தேவதை அருள்பாலிக்கும் விஷயங்களை பிரதிபலிக்கும். இவ்வாறு எல்லா திருத்தலங்களுக்கும் சிறப்புகள் உண்டு என்பதை இயற்கையால் முடிவு செய்யப்படுகிறது.
அவ்வாறே, மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரரின் அனுகிரகத்தைத் தரிசிப்போம்.
தலவரலாறு
கிட்டத்தட்ட இருநூறு நூற்றா ண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டத்தை சேர்ந்த வள்ளியம்மை என்ற பெண் பிழைப்பிற்காக மதுரை மாவட்டம் மாநேரியில் குடிபெயர்ந்தார். அந்த பெண்ணின் கனவில் நான் இங்கு புதைந்திருக்கிறேன் என்னைவழிபடு, உன்னைக் காப்பாற்று கிறேன் என உறுதியான வார்த்தைகள் வர வள்ளியம்மை கண்டுகொள்ள வில்லை.
மறுபடியும்... மறுபடியும் இதேபோன்ற கனவு வர வண்டிர், மேலடை, சொந்தங்களோடு சேர்ந்து சென்று கனவில் வந்த இடத்தை தேடி தோண்டியபோது,
மிரட்டுக் கண்களோடும், பெரிய மீசையோடும் அடர்ந்த கூந்தலை கொண்டையாக உள்ள சிலை ஒன்று இருந்தது. அதனை எடுத்து அவ்விடத்தில் ஓலைக் குடிசை வேய்ந்து வழிபாடு செய்தனர். அன்றிலிருந்து வள்ளியம்மை குடும்பத்தில் பெரிய மாற்றங்கள் நடந்தன.
இந்த நிகழ்வு நடந்த காலகட்டங்களில் அடர்ந்த வனமாக இருந்தது. அச்சமயத்தில், பலருடைய பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறின. ஆதலால், கோயிலில் கூட்டம் அதிகமாயின. அச்சமயம் இருந்த சர்கார் பல சட்டங்களை போட்டனர். ஆனால், சட்டதிட்டங்களுக்கு பாண்டி முனீஸ்வரருக்கு உட்பட்டவரா என்ன? பிறகு, 1930-ல் சில விலக்குகள் அளிக்கப்பட்டன. இன்னும் பலருடைய தீராத பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கோயிலாக இந்த பாண்டி முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
இந்த கோயிலைப் பற்றிய மர்மங்கள் பல சொல்லப்படுகின்றன. இங்குள்ள பாண்டி முனீஸ்வரர்தான் பாண்டிய மன்னன் என்றும் அவரின் அதீத ஆற்றலால் இங்கு ஜீவசமாதி அடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
யார் யாருக்கு இந்த கோயில் நற்பலன் தருகிறது.
*ஜாதகத்தில் சனி மற்றும் கேது இணைவு உள்ளவர்கள்.
*ஜாதகத்தில் செவ்வாய், சனி மற்றும் கேது இணைவு உள்ளவர்கள்.
*திடீரென வேலையிலோ உத்தியோகத்திலோ இருந்து பதவி பறிபோனவர்கள் அல்லது வேலையே பறிபோனவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நற்பலன் உண்டு.
*குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள், எப்பொழுதும் பதற்றமான மனநிலையுடன் இருப்பவர்கள் வழிபட்டாலும் தீர்வு கிடைக்கும்.
*வீட்டில் ஏதேனும் ஏவல், பில்லி, சூன்யம் உள்ளதோ என்ற பயத்தில் உள்ளவர்கள் இங்கு வந்து அமாவாசை அன்று முறைப்படி வழிபாடு செய்தால் விலகும் என்பது நம்பிக்கை.
*எப்பொழுதும் வேலையில் நிரந்தரமாக இருக்க முடியாதவர்கள். இக்கோயிலில் வழிபட்டால் நல்ல பலன் உண்டாகும். கிரகங்களின் இறுக்கங்களால்தான் இந்த அமைப்பு.
*வேலை என்பதே பயம் என்று சொல்லக்கூடியவர்கள் இங்கு வழிபடலாம்.
*சிலருக்கு அடிக்கடி மரண பயம் ஏற்படும் அப்படிப்பட்டவர்களும் இங்குவந்து வழிபடலாம்.
*எல்லா தீயசக்திகளையும் தீய ஆற்றல்களையும் தீர்க்கும் திருத்தலமாக உள்ளது.
*மழலை பாக்கியம் வேண்டுவோருக்கு சிறந்த தலமாக இது விளங்குகிறது.
எப்படி செல்வது? மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள மேலமடை / சிவகங்கை ரிங் ரோடு பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.
வழிபாடு பாண்டி முனீஸ்வரருக்கு வெண்ணாடை, பால், சந்தனம் தரலாம். சமய கருப்பு இங்கு உப தெய்வமாக உள்ளது. அதற்கு பலி தரப்படுகிறது.


