Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நவநீத சோரன்

நவநீத சோரன்

கண்ணனுக்கு பிடித்த உணவுப் பொருட் களில் ஒன்று ‘‘நவநீதம்’’ என்னும் வெண்ணெய். இதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. தயிரை கடைந்து வெண்ணெய் தனியே பிரித்தெடுத்து விட்டால், பின்னர் வெண்ணெயை மோரிலோ, நீரிலோ போட்டால் அது கரைந்து போகாது. அது போல, உலகியல் என்ன மோரிலிருந்து மனம் என்ற வெண்ணெயைப் பிரித்தெடுத்து கண்ணனிடம் ஒப்படைத்து விட்டால், பிறகு அந்த மனம் உலக இச்சைகளில் ஈடுபடாது. கண்ணனால் ஏற்கப்பட்டு விட்ட அந்த மனம், பின்னர் அவனது நினைவிலேயே நிலைத்து நிற்கும். அத்தகைய உள்ளங்களை கண்ணன் கவர்ந்து கொள்வான். இதனாலேயே கண்ணனை ‘‘நவநீத சோரன்’’ என்று போற்றப்படுகிறான்.

கண்ணனின் மூன்று வளைவு தத்துவம்

கண்ணன் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைக் காணலாம். இதற்கு ‘‘திரிபங்கி’’ என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு. இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று. கழுத்தை சாய்த்து குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு. இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிப்பிடுகின்றன.

பிரத்யங்கிரா,சூலினி துர்க்கை வழிபாடு

சிவபெருமான், நாராயணனின் அவதாரமான நரசிம்ம வடிவத்தின் கோபத்தை தணிக்க சரபேஸ்வரராக வடிவெடுத்தார். இந்த கோப சொரூபருக்கு இரண்டு மனைவிகள். சக்திதேவி எல்லோரிலும் உயர்ந்தவள். சரபேஸ்வரர் கடும் கோபம் கொண்டவர் என்பதால், அவருக்கு பிரத்யங்கிராதேவி, சூலினியாகவும் இரு மனைவிகளாக சக்திதேவி வடிவெடுத்தாள்.

பிரத்யங்கிரா தேவிக்கு ஆயிரம் முகங்கள், இரண்டாயிரம் கைகள் உடையவள். இவை யாவும் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதற்காகவே, மேலும் மனிதன் இரண்டு கைகளைக் கொண்டு, இரண்டாயிரம் நற்காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காக அவரது வடிவம் அமைந்தது. இவளை வணங்கினால் சேவை மனப்பான்மை ஏற்படும் தைரியம் உண்டாகும்.

சரபேஸ்வரரின் மற்றொரு தேவியான சூலினியே துர்க்கை எனப்படுபவள். இவள் நமக்கு ஏற்படும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாப்பவள். அறியாமை என்ற அஞ்ஞானத்தை அழித்து, தன்னைத் தானே உணரும் மெய்ஞானத்தை தருபவள். தன்னைச் சரணடைந்தவர்களை கவசம் போல் நின்று பாதுகாப்பவள்.

முக்தி மண்டபம்

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயிலில் முக்தி மண்டபம் என்னும் பெயரில் மண்டபம் ஒன்று உள்ளது. இந்தப் பெயரில் வேறெந்தக் கோயிலிலும் மண்டபம் ஏதும் இல்லை. இக்கோயில் சிவன் பெயர் காயாரோகணர். இது போல் வேறு தலத்தில் சிவனுக்கும், தாயாருக்கு நீலாயதாட்சி எனும் பெயருேம இல்லை.

கல்யாண நவகிரக ஆலயம்

காரைக்குடியில் இருந்து மேற்கே மதுரை செல்லும் வழியில் நாச்சியார்புரத்திற்கு முன்னதாக மூன்று மைல் தொலைவில் உள்ள ஊர் மானகிரி.மானகிரியில் தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வேலுக்கு மட்டுமே தனிச்சிறப்பு. இங்கு நவகிரக சந்நதி உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள் கல்யாண சமேதராய் தத்தம் மனைவியருடன் காட்சி தருவது மானகிரிக்கே பெருமை எனலாம்.

சூரியபகவான் சஞ்சிகை, சாயாதேவி என இரண்டு மனைவியருடனும், புதன் ஞானதேவியுடனும், சனீஸ்வரன் நீளா தேவியுடனும், சந்திரன் ரோகிணியுடனும், ராகு சாரம்ஹியுடனும்,கேது சித்திரலேகாவுடனும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்கள்.துணைவியாரோடு தோன்றும் தெய்வங்களுக்கும், கிரகங்களுக்கும் கருணை அதிகம் என்பார்கள். கோள்களின் தாக்கத்தால் அவதியுறுபவர்கள் மானகிரி நவகிரக ஆலயத்தில் முறைப்படி வழிபாடு செய்து பலன் பெறலாமே!

ஜி.ராகவேந்திரன்