தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநிலங்களில் ஒளித்திருநாள் கொண்டாட்டங்கள்!

Advertisement

தீபாவளியை ஒளித்திருநாளாக அனைத்து மாநில மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

*கோவா மாநிலத்தில் கொங்கணி மக்கள் தீபாவளி அன்று அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, கெளரி பூஜையும், லட்சுமி பூஜையும் செய்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம், தேங்காய் தருவார்கள்.

*ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்கள் முன்னோர்களை வழிபடும் சிரார்த்த தினமாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அடுத்த நாளை மாட்டுப் பொங்கல் போல விசேஷமாக கொண்டாடுகிறார்கள். தீபாவளியன்று காலையில் பாயசம், சப்பாத்தி, வெல்லம், நெய் அடங்கிய தட்டுகளை நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று, அங்கு தீ மூட்டி தட்டிலுள்ள தின்பண்டங்களை சூடாக்கி ஆண்கள் நீரினுள் வரிசையாக நின்று பண்டங்களில் ஒரு பகுதியை இலையில் வைத்து நீரில் விடுவார்கள். மீதம் உள்ளதை பிரசாதமாக பகிர்ந்து உண்பார்கள்.

*உத்தரப்பிரதேசம், பீகாரில் தன்வந்திரியின் பிறந்த தின விழாவாக அனுஷ்டித்து தன்வந்திரி பூஜையில் ஈடுபடுகின்றனர். 4வது நாளை கோவர்த்தன தினமாக சாணத்தில் உருவங்களை செய்து வழிபாடு செய்து, மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் தீட்டி கொண்டாடுவார்கள்.

*மேற்குவங்காளத்தில் எல்லா பண்டிகைகளுமே சக்தி வழிபாடுதான். இரவு முழுக்க காளி மாதாவிற்கு பூஜை நடைபெறும்.

*குஜராத்தில் தீபாவளி பண்டிகை ஆறு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் வாக்பரஸ், பழையன கழித்து வீடு புதுக் கோலமுமாகவும், இரண்டாம் நாள் தன்தோஸ். அன்று திருமகளுக்குப் பூஜை செய்து புதிய ஆபரணங்கள், பண்டங்கள் வாங்கி தொழில் நிறுவனங்களை அலங்கரித்து லட்சுமி பூஜை வழிபாடு, தயிர், நாணயங்கள், தண்ணீர், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜையுடன் வழிபாடு முடியும். மூன்றாம் நாள் காளி சௌதஸ். 4வது நாள் சௌபாடா பூஜையில் சாரதா பூஜையும், பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு, புதிய கணக்கு தொடங்குவார்கள். 5வது நாள் அவர்களுக்கு புத்தாண்டு தினம். எல்லோரும் புத்தாண்டு வாழ்த்து கூறுகின்றனர். 6வது நாள் உடன் பிறப்பு தினமாக கொண்டாடுவார்கள்.

*மகாராஷ்டிராவில் தீபாவளியை நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து வீடுகளுக்கு வெளியே கூடி ‘கோவிந்தா… கோவிந்தா’ என உற்சாகமாக குரல் கொடுத்து, இறைவனை துதித்து, குளிக்கும் போதே வெளியில் வந்து, சிராட்டி என்ற பழத்தை காலால் நசுக்கி, வெற்றிலையை சாப்பிட்டு நசுக்கப்பட்ட பழத்தில் துப்புகின்றனர்.

*ஒடிசாவில் தீபாவளியன்று மக்கள் உயரமான மூங்கில்களை தன்வீட்டு முன்வைத்து, அதில் கயிற்றால் மண்பானைகள் கட்டி, அதில் உள்ளே அகல் விளக்குகளை ஏற்றி, முன்னோர்களின் ஆன்மாவை சொர்க்கத்திற்கு வழி அனுப்பும் நாளாக கொண்டாடப்படுகிறது. இருளை விரட்டி நம் வாழ்வில் நம்பிக்கை ஒளியாக தீப ஒளித்திருநாள் அமையட்டும்.

- எஸ்.மாரிமுத்து, சென்னை.

Advertisement

Related News