இந்திய திருத்தலங்களில் உள்ள சில அதிசயமான கோயில் அமைப்புகளில் இதுவும் அற்புதமான அமைப்புள்ள கோயில்தான். பல ஆண்டுகள் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் அறியாத திருத்தலமாகவே இருந்துள்ளது. அப்படிப்பட்ட இந்த கோயிலை எல்லோரும் அறிவது அதிசயம்தான். அதாவது, ஜோதிடத்தின் பார்வையில் இந்த கோயில் ஒரு அதிசயம் மிக்க கோயிலாகவே உள்ளது.
பலரின் அனுபங்களும் அதிசயங்களும் இந்த கோயில் பல பிரச்னைகளையும் தீர்வு உண்டாக்கி அதிசயங்களை ஏற்படுத்திய உண்மைகள் உண்டு என்பதே உண்மை்.
தலவரலாறு
புராணத்தின் படி, கருடனின் அச்சுறுத்தலால் நாகங்களின் அரசனான வாசுகி பாதுப்பான இடத்தை தேடி வருகிறார். குமார பர்வத மலையில் தவம் செய்கிறார். தாரகாசுரன் உட்பட அசுரர்களை வென்ற முருகப் பெருமான். குமார பர்வத மலையில் தங்கி இந்திரனின் மகளான தேவசேனையை திருமணம் செய்துெகாண்டார் என்கிறது புராணம்.
வாசுகியின் தவத்தை கண்ட முருகப் பெருமான் வாசுகிக்கு அடைக்கலம் தருகிறார். இங்கே நாகராஜனே முருகப்பெருமானின் வாகனமாகவும் சிம்மாசனமாகவும் மாறி முருகப் பெருமானோடு சேர்ந்தே காட்சியளிக்கிறார்.
கோயில் அமைப்பு
இங்கு இரண்டு திருத்தலங்கள் உண்டு. ஒன்று ஆதிசுப்ரமண்யா என்ற கோயில். பின்புறம் உள்ள அமைப்பாகும். இங்கு மூலஸ்தானத்தில் புற்று மட்டுமே இருக்கும். முதலில் இதனைத்தான் தரிசனம் செய்ய வேண்டும். பின்பு, இங்குள்ள புதிய கோயிலில் வழிபட வேண்டும் என்பது பழக்கமாக உள்ளது.
இந்த கோயிலின் இயற்கையான அமைப்பே மனத்தை ரம்மியமான மனோநிலைக்கு கொண்டு செல்கிறது. மேலும், இயற்கைக்கு நடுவே அமைந்துள்ள இந்த திருக்கோயில் ஆன்மிகத்துடன் மிகவும் ரம்மியமான மனோ நிலையைத் தருகிறது. இங்குள்ள குமாரதார என்னும் ஆற்றில் நீராடி இங்கு முருகப் பெருமானை தரிசனம் செய்வது நல்லது.
ஜோதிடத்தின் பார்வையில் இக்கோயில் என்ன பலன்களை யார் யாருக்குத் தரும்...
*ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பாதகமான இடத்தில் அமர்ந்தாலோ அல்லது செவ்வாய்க்கு நேர் எதிர்மறையான கிரகங்களான சனி மற்றும் ராகு - கேது (சர்ப்ப கிரகங்கள்) தொடர்பில் இருந்தாலே அவர்களின் வாழ்வில் பல பிரச்னைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
*வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சித்தால் தடைகள் உண்டாகும்.
*வீட்டில் சுபகாரியங்கள் செய்ய முயற்சித்தால் தடைகள் ஏற்படும்.
*சிலருக்கு திடீரென சிற்சில நோய்கள் உண்டாகும். அந்த நோய்கள் ஏன்? வந்தன என்பதும் தெரியாது. சில நோய்கள் மாதக் கணக்கில் வருடக் கணக்கில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவற்றை குணப்படுத்துவதற்கான வழியும் தெரியாது. தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், தீர்வுகள் தென்படாது.
*இன்னும் சிலருக்கு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டே இருக்கும். அவ்வாறு நிகழும் விபத்துகளுக்கும் காரணம் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து போவார்கள் என்பது நிச்சயம்.
*சிலருக்கு ரத்தத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு, தோல் நோய்கள் உண்டாகும். அந்த தோல் நோய்களும் மாதக் கணக்கில் வருடக் கணக்கில் தொடர்ந்தால் என்னசெய்ய முடியும்?
*இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வையும் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் தரக்கூடிய திருத்தலம் குக்கே சுப்ரமண்யாதான்.
என்ன பரிகாரம் செய்யலாம்?
சர்ப்ப சம்ஸ்கார பூஜை, ஆஷ்லேஷா பலி, நாகப் பிரதிஷ்டை இந்த ஒவ்வொரு பரிகாரங்களும் கோயில் மூலம் செய்யப்படுகின்றன. ஆன்லைனில் நீங்கள் உங்கள் பரிகாரத்திற்கான விவரங்கள் தரப்பட்டுள்ளன.
எப்படி செல்லலாம்?
மங்களூரு சென்று அங்கிருந்து குக்கே சுப்ரமணியாவிற்கு ரயில் மற்றும் பேருந்தில் பயணிக்கலாம். அல்லது பெங்களூருவில் இருந்து மங்களூரு செல்லும் ரயில் வழித்தடத்தில் சுப்ரமண்யா ரோடு என்ற நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.


