தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கார்த்திகை நம்பிக்கைகள்

திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன் விலங்குகள் பார்த்தாலும்கூட அவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம்.கார்த்திகை தீபத் திருநாள் அன்று 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக்கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்களை சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் ஏற்றும் தீபங்களில் இருந்து ஆறு, ஆறாக பசுநெய் விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவ வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. வட மாநிலங்களில் கார்த்திகை தீபத் திருநாள் அன்று பெண்கள் தீபம் ஏற்றி, அதை இலையில் வைத்து ஆற்றில் விடும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்தால் தங்கள் உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.

Advertisement

முருகனுக்கு உகந்த கார்த்திகை

திருக்கார்த்திகை என்றவுடன் தீபம் மட்டுமின்றி, தமிழ்க் கடவுள் முருகப் பெருமானும் சேர்ந்தே நம் நினைவுக்கு வருகிறார். சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு சுடர்கள் சரவணப் பொய்கையில் விழுந்து, அவை 6 குழந்தைகளாக மாறின. அந்த 6 குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். இந்த 6 குழந்தைகளும் ஓரே குழந்தையாகி உருவானவர்தான் முருகப்பெருமான். இதனால் தான், அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் வந்தது. முருகப் பெருமானை சீராட்டி பெருமைக்குரிய கார்த்திகைப் பெண்கள், கார்த்திகை நட்சத்திரமாக விண்ணில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஆதனால் திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து வழிபட்டால் முருகப் பெருமானின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகலாம்.

இல்லங்களில் ஒளி வீசும் கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. அவ்வாறு தினமும் விளக்கேற்ற இயலாதவர்களை அந்த மாதத்தில் வரும் துவாதசி, சதுர்தசி பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது விளக்கேற்ற வேண்டும். இந்த மூன்று தினங்களில் விளக்கேற்றினாலே கார்த்திகை முழுவதும் தீபம் ஏற்றிய பலனை பெறலாம்.

பெரிய கார்த்திகை என்றால் என்ன?

1. கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமி அன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. ஆனால், அன்றைய தினத்தில் மற்ற பௌர்ணமி தினத்தைவிட நிலவின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும்.

2. அன்றைய தினம் சிவசக்தி சமேதராக பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும், இறைவியும் அருள் பாலிக்கின்றனர் என்கிறார்கள்.

3. கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக் காணலாம்.

4. சுபமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பௌர்ணமியில், கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வந்தால் அதை ‘பெரிய கார்த்திகை’ என்கிறார்கள்.

திருவண்ணாமலைக்கு வரும் குபேரன்

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று விண்ணுலகிலிருந்து குபேரன் பூலோகத்திற்கு வருகிறார். பூலோகத்திற்கு வரும் குபேரன் நேராக அக்னித் தலமான திருவண்ணாமலைக்குச் செல்கிறார். திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள அஷ்டலிங்கங்களில் ஒன்றான குபேரலிங்கத்திற்கு அன்றைய தினப் பிரதோஷ காலத்தில் அதாவது 4.30 மணி முதல் 6.00 மணி வரை பூஜை செய்வார். பூஜையை முடித்த பிறகு கிரிவலம் வருவார். அந்த நாளில் நாமும் மாலை 4 மணிக்கு மேல் குபேரலிங்கம் கோயிலுக்கு வந்து குபேரலிங்கத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்று கிரிவலம் வந்தால் குபேரசம் பத்துகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாகலட்சுமி

Advertisement

Related News