Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கிரக யுத்தம் தோஷமா? யோகமா?

கிரகங்கள்தான் எல்லாவற்றையும் இயக்குகின்றன. இதை உணர்வதற்கு மனிதர்களுக்கு காலம் தேவைப்படுகிறது. காரணம், தன்னுடன் இணைந்து படிக்கும் நண்பர்கள் ஆகியவர்களுடன் தங்களை ஒப்பிட்டு காணும் வழக்கம் நமது ஒவ்வொரு மனத்திற்கும் உண்டு. சிலருக்கு முன்னேற்றம் வேகமாக நடந்து வேறொரு நிலையில் இருக்கின்றனர். ஆனால், நாம் வேறு நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும் பொழுது அதற்கான காரணத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அவ்வாறு சிந்திக்கும் பொழுது அவர்கள் வயது 40ஐ கடந்திருக்கிறார்கள். காரணம், காலக்கணிதம் என்று அறிந்து கொள்ளும் நிலையில்... பல ஜோதிடர்களை பார்த்து இவரும் அரை ஜோதிடராகவே மாறிவிடுகின்றார் பலர் என்பது நிதர்சனமான உண்மையாக உள்ளது. இவற்றில் கிரக யுத்தம் என்ற யோகம் உண்டு. இந்த கிரக யுத்தமானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தரவல்லதாக உள்ளது.

கிரக யுத்தம் தோஷம்/ யோகம் என்றால் என்ன?

கிரகங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட காரகங்களையும் மாறுபட்ட திசைகளையும் மாறுபட்ட ஒளியையும் மாறுபட்ட பண்பையும் கொண்டுள்ளது என்பதை அறிவோம். இப்படிப்பட்ட பல தன்மைகள் கொண்ட கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசிக்கட்டத்தில் இருப்பது கிரக யுத்தம்தான். இவற்றில், ஒரே ராசிக்கட்டத்தில் அதிகபட்சமாக எட்டு கிரகங்களுக்கு மேல் இருப்பதும், சில நேரங்களில் ஒரே ராசிக்கட்டத்தில் மூன்று முதல் ஏழு கிரகங்கள் இருப்பதும் கிரக யுத்தமாகும்.

கிரக யுத்தம் உட்சிறப்புகள் என்ன?

கிரக யுத்தம் என்பது யோகமா, தோஷமா என்றால் சில பாவகங்களுக்கு நன்மைத் தரக்கூடியதாகவும் சில பாவகங்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியதாகவும் இந்த இணைவுகள் உள்ளன. அதிகபட்சமாக கெடுதல் தரக்கூடிய அமைப்பாகவே இந்த கிரக யுத்தம் உள்ளது. ஒரே ஒரு நன்மை என்னவென்றால், இந்த கிரகங்கள் பதினோராம் பாவகம் (11ம்) உள்ள இடத்தில் இடம்பெற்றால் சில நற்பயன்கள் ஏற்படும் என்பதுதான் விதிவிலக்கு. அதிலும், சில குறைபாடுகள் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

கேந்திரங்களில் சந்திரனுடன் இணைந்து கிரகங்கள் பல கூடினால் பொருளாதாரம் மற்றும்பொருள் சேர்க்கை, வண்டி வாகனசேர்க்கை,சொத்து சேர்க்கைகள் உண்டாகி வளரக்கூடும். ஆனால், அதற்குள் சிலமாறுபட்ட அமைப்புகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

கிரக யுத்தத்தின் பலன்கள் என்ன?

*பதினோராம் பாவகத்தில் (11ம்) பல கிரகங்கள் இணையும் பொழுது, பொருளாதார விஷயத்தில் மேம்பாடுகள் உண்டாகும். ஆனால், குழந்தை பிறப்பு மற்றும் சிந்தனைகளில் ஏராளமான மாறுபட்ட அமைப்புகளைத் தோற்றுவிக்கும்.

* எந்தக் காரியம் தொடங்கினாலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் எதுவுமே இயங்காதது போன்ற அமைப்புகள் இருக்கும்.

*லக்னத்துடன் கிரக யுத்தம் ஏற்படின்

சிந்தனை மிகவும் கட்டுப்பாடற்றதாகவும் இவர் தொழிலுக்காகவோ, உத்யோகத்திற்காகவோ பலரை அணுக வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். ஆறாம் பாவகம் மற்றும் எட்டாம் பாவகத்துடன் கிரகங்கள் கூட்டாக இணைந்து யுத்தம் ஏற்படுத்தும் பொழுது அதை ஒட்டியே திசா - புத்திகள் இணைந்து நடத்தும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

* பல்வேறு வித்தியாசமான பல தொழில்களை செய்யும் பாக்கியமும் நடத்தும் பாக்கியமும் இவர்களுக்கு உண்டாகும். அந்தத் தொழிலில் ஏமாற்றங்களும் மாற்றங்களும் உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

*எந்தக் கிரகத்தின் முழுப்பலன்களும் இவர்கள் கிடைக்கப் பெறாதவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்குள் எப்பொழுதும் சின்னச் சின்ன குறைகள் இருந்து கொண்டே இருக்கும்.

கிரக யுத்தத்திற்கான சிறந்த பரிகாரங்கள் என்ன?

*நவதானியத்தை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் செல்லும் பொழுது அந்த நவதானியத்தை உங்களின் ஒரு கைப்பிடியளவு எடுத்து நீங்கள் படுக்கும் படுக்கைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். சனிக்கிழமை காலை எழுந்து அந்த நவதானியத்தை எடுத்து உங்கள் தலையை இடதுபுறமாக 9 முறையும் வலதுபுறமாக 9 முறையும் சுற்றி உங்கள் தெருவிலுள்ள மூன்று சந்திகளிலோ அல்லது ஓடும் ஆற்று நீரிலோ போட்டு விடவும்.

*உங்களுக்கு கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருப்பின், நீங்கள் நவகிரகங்களுக்கும் நவகிரக சாந்தி ஹோமம் செய்து கொள்ளவும். இதனால், நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள். உண்டு.

*வீட்டில் ரிப்பன் போன்று 1 அடி நீளமுள்ள ஆரஞ்சு, சிவப்பு, பச்சை, மஞ்சள், பிங்க் மற்றும் நீலம் இந்த வண்ண வரிசையில் வரிசையாக அடுக்கி ஒவ்வொன்றாக சின்னச் சின்னதாக வெட்டவும்.

*கோயில்களில் உள்ள நவகிரகங்களுக்கும் நீங்கள் அதற்குரிய தானியத்தை நைவேத்யமாக கொடுத்து வழிபட்டு பின்பு கோயிலுக்கு வெளியில் உள்ள முடியாத நபர்களுக்கு உணவு செய்து வாருங்கள்.

*மாதத்திற்கு ஒரு முறை நீங்கள் புண்ணிய நதிகளில் நீராடி ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் பசுக்களுக்கும் கீரை போன்றவற்றை தானம் செய்யுங்கள். இவையெல்லாம் நவகிரக தோஷங்களை குறைப்பதற்காக மட்டுமே. முழுமையான தீர்வுகளை காண நாம்தான் தயாராகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.