Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இன்னம்பூர், தான்தோன்றீஸ்வரர்

சோழமன்னரிடம் கணக்கராக பணியாற்றியவர் சுதன்மன். சுதன்மனை பற்றி அவரை பிடிக்காதவர்கள் புறங்கூறியதால் மன்னனுக்கு சந்தேகம் உண்டாயிற்று. ஒருமுறை சுதன்மன் காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், உரிய கணக்கை காட்டும்படி கடுமையாக உத்தரவிட்டான் மன்னன். தன் மீது பழி உண்டாகிவிட்டதே என எண்ணிய சுதன்மன் சிவபெருமானை மனமுருக வேண்டினார். உடனே சிவபெருமான் சுதன்மன் வடிவத்தில் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே ''ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விவரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார்.

வருத்தப்பட்ட மன்னன் சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டார். ஈசனுக்கு கோயில் எழுப்பினான் மன்னன். சுவாமிக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அட்சரம் என்பதற்கு சக்திவாய்ந்த எழுத்து என்று பொருள். சுயம்பாக இறைவன் அருள்புரிந்ததால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு உள்ளது. இங்குள்ள அம்பாள் நித்தியகல்யாணி, சுகந்த குந்தலாம்பாள் என்ற நாமங்களில் அழைக்கப்படுகிறாள். இங்கு தல விருட்சமாக செண்பக மரமும் பலா மரமும் உள்ளது. புராணத்தில் இத்தலம் திருஇன்னம்பூர் என்றும் திருவின்னம்பர் என்றும் அழைக்கப்பட்டது.

திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாக உள்ளது. இன்னன் என்றால் சூரியன் என்று பொருள். இன்னன் நம்பூர் என்றே இந்த ஊரின் பெயர் இருந்தது. பிறகு இதுவே இன்னம்பூர் என்று மருவியது. ங்குள்ள அம்பாள் கல்யாண கோலத்தில் ட்சி தந்து அருள்புரிகிறாள். நித்தயகல்யாணி என்ற நாமம் அம்பாளுக்கு உகந்ததாகவே உள்ளது. இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு விரைவில் திருமணம் ஏற்பாடாகும் என்பது நம்பிக்கை. துர்வாசரின் சாபத்தைப் பெற்ற தேவலோக யானையான ஐராவதம் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோச்சனம் அடைந்ததாக புராணம் சொல்கிறது. இங்குள்ள சுயம்பு திருமேனியில் சூரியனின் கதிர்கள் புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் விழுகிறது என்பது சிறப்பான ஒன்றாகும். சூரியன் வந்து வழிபட்ட தலமாகச் சொல்லப்படுகிறது.

இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், புதன், சுக்ரன், சனி ,குரு கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.

*பள்ளிப்படிப்பைத் தொடங்கும் குழந்தைகள் பங்குனி மாதம் வரும் பௌர்ணமி நாளில் நெல்லில் எழுதி இங்கிருந்து கல்வியைத் தொடங்கினால் கல்வியில் மேம்பாடு அடைவார்கள்.

*வியாழக்கிழமை வரும் பௌர்ணமி அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். திங்கள்,வெள்ளி வரும் பெளர்ணமி நாளில் பாலில் செய்யப்பட்ட இனிப்பு சுவாமிக்கு வைத்து நைவேத்தியம் செய்து சாப்பிட்டால் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

*பங்குனி மாதம் வரும் பௌர்ணமி நாளில் கோதுமையினால் செய்யப்பட்ட இனிப்பாலான நைவேத்தியம் செய்து பச்சை நிற வஸ்திரம் கொடுத்து வழிபட்டால் கல்வியில் மேற்படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள்.

*சித்திரை மாதம் வரும் பௌர்ணமி நாளில் இங்கு வழிபட்டால் வாக்கு சொல்பவர்களுக்கு வாக்கு பலிதம் உண்டாகும்.