Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராசிகளுக்கான நோய் குணமாக்கும் திருத்தலங்கள்

நோய்கள் உருவாவதற்கு நம்முடைய மரபணு செல்களின் மாற்றங்களாலும் பூர்விக கர்மாக்களாலும் எதிரிகளின் பிரச்னைகளாலும் உருவாகிறது. எது எப்படியாயினும் அதனை நிவர்த்தி செய்வதற்கான காரணங்கள் பல உள்ளன. சரியான காரணங்களையும் சரியான தீர்வுகளையும் கண்டறிவதே நோய் தீர்வதற்கான சிறந்த வழி. இதனை ஜோதிடத்தின் கிரகங்கள் வழியோ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் ஏற்படும்.

கிரகங்களின் நட்பு மற்றும் பகை போன்ற அைமப்புகளாலும் மாற்று பாவகங்களில் அமர்வதாலும் சில

மாற்றங்கள் ஏற்படுகின்றன.

எல்லா நோய்களையும் ஒரே முறையால் குணப்படுத்துவது என்பது இயலாது. சில நோய்களை மனதை சாந்தப் படுத்துவதாலும் சில நோய்களை இடமாற்றி அவர்களை இருக்கச் செய்வதாலும் சில நோய்களை தொடர் மருத்துவத்தாலும் சில நோய்களை பழக்க வழக்கங்களை மாற்றுவதாலும் சில நோய்களை உணவுகளை மாற்றுவதாலும் குணப்படுத்த முடியும் என்கிறது வைத்திய சாஸ்திரம்.

இந்த முறைகள் அனைத்தோடும் கிரகங்களும் பாவகங்கள் மற்றும் கிரகங்களின் பார்வைகள் மற்றும் வக்ரம் ஆகியவைகள் தொடர்பு பெறுகின்றன. இதில் ஒரு தனிப்பட்ட மனிதனின் ஜனன கால கிரகங்கள் கோட்சார கிரகங்களும் தொடர்பு கொள்கின்றன.

இது தொடர்பான ஒவ்வொரு ராசிகளுக்கான நோய் தீர்வாவதற்கான ரகசியத்தை அறிவோம்...

மேஷம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் சேலத்தில் உள்ள குகை மாரியம்மனை சனிக்கிழமையும் திங்கள் வழிபடுவது சிறந்த நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: மேஷ ராசிக்காரர்கள் கோயம்புத்தூர் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வனபத்ர காளியம்மனை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் சிறந்த நற்பலன்கள் உண்டாகும். நோய்கான தீர்வுகள் கிடைக்கும்.

ரிஷபம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது சிறந்த நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: ரிஷப ராசிக்கார்கள் மதுரை ஒத்தக்கடை யானைமலை அடிவாரத்தில் உள்ள பிரத்யங்கரா தேவியை ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் வழிபடுவது சிறந்த நற்பலன்களைத் தரும்.

மிதுனம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் திருவண்ணாமலை இரும்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலில் செவ்வாய் வழிபாடு செய்வது சிறந்த நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாளை புதன்கிழமை வழிபடுவது நோய்க்கான நல்ல தீர்வை உண்டாக்கும்.

கடகம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் கோயமுத்தூர் உப்பிலி பாளையத்தில் உள்ள தண்டு மாரியம்மனை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: சென்னை அருகில் உள்ள திருவேற்காடு அருள்மிகு கரு மாரியம்மன் கோயிலை வழிபடுவது சிறந்த நற்பலன் களைத் தரும்.

சிம்மம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் திருச்சியிலுள்ள வயலூர் முருகனை காலையிலும் விராலிமலை முருகனை மாலையிலும் வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: சிம்ம ராசிக்காரர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அருகில் கொல்லிடம் நதிக்கரையில் உள்ள ஸ்ரீ சஞ்சீவணி ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த நற்பலன்களையோ அல்லது நோய்ப்கான தீர்வை தரும்.

கன்னி: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் கும்பகோணம் அருகில் உள்ள அரிச்சந்திரபுரம் சந்திர மௌலீஸ்வரரை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: கன்னி ராசிக்காரர்கள் கும்பகோணம் கொந்தங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது சிறந்த நோய் தீர்விற்கான வழிகளை காட்டும்.

துலாம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை வாசல் அருகில் உள்ள சனீஸ்வரனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்த நற்பலன்களை தரும்.

கோட்சார பரிகாரம்: துலாம் ராசிக்காரர்கள் காளையார் கோயில் அருகே உள்ள வெட்டுடைய காளியம்மனை வழிபடுவது சிறந்த நோய் தீர்விற்கான வழிகளை காட்டும்.

விருச்சிகம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் தென்காசி இலந்தூர் அருகில் உள்ள மதுநாதீஸ்வரர் திருத்தலத்தில் உள்ள சனிபகவானை வழிபடுங்கள்.

கோட்சார பரிகாரம்: விருச்சிகம் ராசிக்காரர்கள் நாகர்கோவிலில் உள்ள காமாட்சி அம்மனை சனிக்கிழமை வழிபடுவது நோய்க்கான தீர்வுகளை தரும்.

தனுசு: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் பழநி தண்டாயுதபாணியை வியாழக்கிழமை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: தனுசு ராசிக்காரர்கள் பழநி மலையில் வெளிப்பிரகாரத்தில் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வ நாதரை தரிசிப்பது நற்பலன்களைத் தரும்.

மகரம் மற்றும் கும்பம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் பழநியிலுள்ள முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சுருளி அருவிக்கு அருகில் உள்ள சுருளி கயிலாசநாதரை வழிபடுவது நற்பலன்களைத் தரும். நோய் தீர்விற்கான சிறந்த வழிகளைத் தரும்.

மீனம்: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கஸ்தூரி ரங்கநாத பெருமாளை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

கோட்சார பரிகாரம்: மீனம் ராசிக்காரர்கள் ஈரோட்டில் உள்ள புதூர் லட்சுமி நாராயணர் கோயிலில் உள்ள காளிங்க நர்த்தனரை வழிபடுவது நல்ல தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யும்.