Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர்

தேவர்களை கொடுமைப்படுத்திய அசுரர்களை சம்ஹாரம் செய்ய மரமல்லிகை வனமாக இருந்த வழியே சிவ பெருமான் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால் சிவனுடைய தேரின் அச்சு முறிந்தது. தேர் விழாமல் இருக்க விஷ்ணு தாங்கிப் பிடித்தார். சிவன் கழுத்தில் இருந்த கொன்றை மாலை இங்கே விழுந்ததால் சுவாமி சுயம்பாக எழுந்தருளினார்.

ஒரு சமயம் சிவத்தலங்களுக்கு பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவராகவும் முதியவராகவும் இருந்த சிவன் இங்கே குடி கொண்டிருக்கிறார். பதிகம் பாடு என்றார்! இங்கு சம்பந்தர் சிவன் இருந்த இடத்தை தேடி அவரைக் காண முடியாமல் மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன். தான் இருக்கும் இடத்தைக் காட்டவே பதிகம் பாடினார்.

தேவ கன்னியர்களான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் இத்தலத்தில வந்து அழகு குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். இங்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படி அருளினார். இவர் சின் முத்திரை கொண்ட வலக்கையை இதயத்தில் வைத்தும், வலது பாதத்தை மடக்கி யோகப் பட்டையுடன் உள்ள திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப் பெறுவர் என்பது நம்பிக்கை. திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட சிவன் பூமியை தேராகவும் சூரிய - சந்திரரை சக்கரங்களாகவும் பிரம்மனை தேரோட்டியாகவும் மேரு மலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், நாராயணனை அம்பாகவும் கொண்டு தாரகாஷன், கமலாகஷன் மற்றும் வித்யுன்மாலி ஆகியோரின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்த புறப்பட்டார் சிவன். எல்லோரையும் காக்க வந்த இறைவனுக்கு தெய்வநாகேஸ்வரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.

இங்குள்ள தெய்வத்திற்கு சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்ரன் கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன.

*பெளர்ணமி நாளில் செண்கப் பூவில் மாலை எடுத்து சுவாமியை வழிபட்டு வந்தால் தோல் பிரச்னை நீங்கி முக வசீகரம் பெறும் என்பது நிச்சயமாகும்.

*ஜாதகத்தில் (6ம்) பாவகத்தில் வியாழன் இருந்தால் அது நன்மை செய்யாது. அப்படி ஜாதக அமைப்புள்ளவர்கள் கொண்டைக்கடலை மற்றும் தேனை மடப்பள்ளிக்கு கொடுத்து வந்தால் அந்த தோஷம் விலகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

*குரு தோஷம் கொண்ட ஜாதகர்கள் இத்தலத்திற்கு வந்து தொடர்ந்து 48 நாட்கள் செண்பகப்பூவில் மாலை கொடுத்து வழிபட்டு குதிரைவாலி அரிசியாலும் தேனால் செய்யப்பட்ட நைவேத்தியத்தைக் கொண்டு வழிபட்டால் குரு தோஷம் விலகி சுபிட்சம் பெறுவர்.

*இந்த திருத்தலத்தில் அத்தி மரத்தை நட்டு வளர்த்து பாதுகாத்து வந்தால் அந்த மரம் வளர வளர உங்களின் தோஷம் குறைந்து நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

எப்படிச் செல்வது?

காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., சென்னையிலிருந்து 60 கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது, சென்னை பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். சென்னை- அரக்கோணம் சாலையில் கூவம் கிராமத்தை கடந்து 6 கி.மீ சென்றால் எலுமியன்கோட்டூர் தலத்தை அடையலாம்.