Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ராஜகோபுர தரிசனம்!

அருள்மிகு விஜயமங்கலம் ஜெயின் கோயில்

விஜயமங்கலம் ஜெயின் கோயில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சமணத் திருத்தலம். இது சமண மதத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரபிரபா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. வி ஜயமங்கலம் ஜெயின் கோயில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சமணத் திருத்தலம். இது சமண மதத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரபிரபா அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்தக் கோயில் கி.பி.678ம் ஆண்டு, வேளிர் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் கொங்குவெளிரால் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் விஜயமங்கலம் கொங்கு நாடு என அழைக்கப்பட்ட சமணர் வாழ்ந்த முக்கிய மையமாக இருந்தது.இத்தலம் மேதலை கங்கர்கள் அரசகுடியினரின் கட்டிடக்கலை வடிவத்தில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய விமானம், அர்த்தமண்டபத்தில் பஞ்ச-பரமேட்டிகள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள தூண்களிலும் கலை வடிவ செதுக்கல்களை காணலாம்.

சமணத் தத்துவக் கருத்துக்களையும் ஆன்மிகச் சின்னங்களையும் பிரதிபலிக்கும் சிற்பங்களையும் இங்கு பார்க்க முடியும். மேலும், திராவிடக் கலை வடிவில் செங்கல்லால் கோபுரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை காற்றோட்டம் ஏற்படும் வகையில் அதன் வடிவமைப்பு பண்டைய காலத்தில் நிலைத்த கட்டிடங்களின் சான்று என்று கூறலாம். ஆன்மிக அமைதி, வரலாற்றுப் பெருமை, கலைநயம் ஒன்றாக இணைந்து காணப்படும் அபூர்வத் தலமாக விஜயமங்கலம் ஜெயின் கோயில் திகழ்கிறது.

திலகவதி