ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் ஆலயம்
ஆலயம்: போஜேஸ்வர் ஆலயம், போஜ்பூர், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 32கிமீ தொலைவு.
காலம்: பொ.யு. 1010-1055, போஜராஜ மன்னர்
திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயில் இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே அதிகளவிலான சிற்றாலயங்களைக் கொண்ட பெரும் கோயில் வளாகமாகும். இக்கோயில் வளாகம், அதன் மேற்கே ‘கமலாலயம்’ குளத்துடன் சுமார் 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இவ்வளாகத்தின் தெற்குப்புறத்தில் அமைந்துள்ள அசலேஸ்வரர் கோயில், அப்பரால் பாடல் பெற்ற பெருமை பெற்றது.சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள் நாயனார், தண்ணீர் கொண்டு கோயில் விளக்கை ஏற்றிய சிறப்பு வாய்ந்த தலம் ‘ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் கோவில்’ என்றழைக்கப்படும் இவ்வாலயம் ஆகும்.
‘சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர்விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரநெறியார் கோவில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நிறைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திருவிளக்கு நீரால்
எரித்தார் நாடு அறிய’சேக்கிழார் - பெரிய புராணம்.
சிவ பெருமான் ‘அசலேஸ்வரர்’ என்ற பெயரில் வணங்கப்படுகின்றார். இறைவி: வண்டார் குழலி அம்மன்.இக்கோயில் செம்பியன் மகாதேவியால் கற்கோயிலாகப் புனரமைக்கப்பட்டதாக முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு பதிவு செய்கிறது. ஆதித்த சோழன்-I (பொ.ஆ.884), பராந்தக சோழன்-I (பொ.ஆ.939), இராஜராஜ சோழன்-I, ராஜாதி ராஜன் மற்றும் விக்ரம சோழன் ஆகிய சோழ மன்னர்கள் வழங்கிய பல்வேறு கொடைகள் மற்றும் மானியங்கள் குறித்த கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இக்கோயில் புறச்சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள கோஷ்டச்சிற்பங்களின் பேரழகு காண்போரைக் கவர்ந்திழுக்கும்.அமைவிடம்: ஆரூர் அரநெறி அசலேஸ்வரர் ஆலயம், தியாகராஜர் கோயில் வளாகம். திருவாரூர்.
மது ஜெகதீஷ்