Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆவூர்,மங்களாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர்

பூலோகத்திற்கு வந்த பராசக்தி தவம் செய்வதற்காக வந்து இத்தலத்தில் தங்கினாள். அச்சமயம் வனமாக இருந்த இடம்தான் ஆவூர். அங்குள்ள மரம், செடி கொடிகளாக மாறி அன்னையின் தவத்தில் அன்னை வழிபட்டனர். சக்தி தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி அளித்து அன்னையின் தவத்திற்கு வரம் கொடுத்தார். இந்த தலத்தின் இறைவனுக்கு ‘கவர்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்திற்கு காமதேனுவின் கன்றான 'பட்டி' என்ற பசு வந்து இந்த வனத்தில் உள்ள லிங்கத்தின் மீது பாலால் அபிஷேகம் செய்து வழிபட்டது. அச்சமயமும் சிவபெருமான் காட்சியளித்தார். சிவபெருமானிடம் இந்த பசுவானது இத்தலத்திலோ நிரந்தரமாக தங்க வேண்டிக் கொண்டது. பசு வழிபட்ட தலமாக உள்ளதால் ‘பசுபதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு வானது பிரம்மன் அறிவுரைப்படி இங்கு வந்து வழிபட்டால் சாபம் விமோசனம் ஏற்படும் என கூறினார். ஆதலால், காமதேனு சாபம் நீங்கிய தலமாக இத்திருக்கோயில் உள்ளது. காமதேனு இங்கு வந்து வழிபட்டதால் இதற்கு (கோ + வந்த குடி) கோவந்தகுடி என்ற பெயரும் உண்டு. இங்குள்ள கோயில் கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பம் உள்ளது. இவ்விடத்திற்கு மணிகூடம், அசுவத்தனம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

கயிலையில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் போட்டி ஏற்பட்டு இங்கு கொண்டு வரப்பட்ட மலைகளில் ஒன்று நல்லூரிலும் மற்றொன்று ஆவூரிலிலும் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. சப்தரிஷகள் மற்றும் வேந்தர்களும் வழிபட்ட தலமாக சொல்லப்படுகிறது. தசரத மன்னன் இங்கு வந்து வழிபட்டதாக புராணம் சொல்கிறது. தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், செவ்வாய், வியாழன், சுக்ரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளது.

* அமாவாசை நாளில் இத்தலத்தில் நீராடி தயிர் நைவேத்யம் செய்து பின்பு அங்குள்ளவர்களுக்கும் பசுவிற்கும் அகத்திகீரை கொடுத்தால் பித்ரு தோஷங்கள் விலகும்.

* பூரம் நட்சத்திரநாளில் மொச்சை பயிறும் எள்ளுருண்டையும் சுவாமிக்கு நைவேத்யம் செய்து பசுவிற்கு தானம் செய்தால் குபேர சம்பத்து உண்டாகும். தடைபட்ட தனம் வரவு உண்டாகும்.

* லக்னத்தில் வியாழன் உள்ளவர்கள் சுவாமிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் சொர்ணாபிஷேகம் செய்து சொர்ணத்தை வீட்டிற்கு எடுத்து வந்தால் ஆபரணச் சேர்க்கையும் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.

* ஜாதகத்தில் 7ம் பாவகம் மற்றும் 8ம் பாவகத்தில் செவ்வாய் இருந்தால் வித்யா குங்குமம் வாங்கி சுவாமி அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகி நன்மை ஏற்படும்.

* பெளர்ணமி நாளில் கோளறு பதிகத்தை இங்கு பாராயணம் செய்தால், நவகிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும். கர்ம தோஷங்கள் இருந்தாலும் குறையும். இங்கு வந்து வழிபடுவதால் பல தோஷங்கள் விலகி நன்மை ஏற்படுவதே இத்தலத்தின் சிறப்பாகும்.