பொருள் ஈட்டும் வழிகளானது பாவகங்கள் மற்றும் மற்ற கிரகங்களின் பார்வை அடிப்படையில் பொருள் தர வழிவகை செய்கிறான் குபேரன். இதில், எப்படிப்பட்ட வழிகள் என்பதையும் அவர்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்புகள்தான் பொறுப்பேற்கின்றன. ராசிக்கென்று சில குபேர ஸ்தலங்களும், தனிப்பட்ட ஜாதகங்களுக்கு சில குபேர ஸ்தலங்களும் உண்டு.
ஒவ்வொரு கோயிலிலும் குபேரன் அனுக்கிரகம் செய்துகொண்டுதான் இருக்கிறார். இதனால் அந்த திருத்தலங்களுக்கு செல்லும் பட்சத்தில் கோயிலின் ஆகர்ஷண சக்தியால் நாம் அதற்கான இயக்கத்தை பெறுகிறோம்.
ராசிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்குமான கோயில்கள்.
இங்கு நீங்கள் கோயிலில் வழிபடுவது மட்டுமின்றி அந்த கோயிலில் சுவாமிக்கு வஸ்திரமோ அல்லது அபிஷேகத்திற்கு பொருள் கொடுத்து அர்ச்சனை செய்து வழிபட்டு, கோயிலில் சுவாமிக்கு உடுத்திய வஸ்திரங்களையோ அல்லது அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தங்களையோ அல்லது சுவாமி நைவேத்யம் செய்த பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பட்சத்தில் உங்களின் குபேரனின் ஆசியைப் பெறுவீர்கள்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் ரெங்கநாதரையோ அல்லது வெள்ளீஸ்வரரையோ வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வெங்கடேசப் பெருமாளையோ அல்லது கோதண்ட ராமரையோ செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் நித்ய கல்யாணப் பெருமாளையோ அல்லது அன்னபூரணியை திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும்பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
கடகராசியில் பிறந்தவர்கள் சங்கர நாராயணரை ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
சிம்மராசியில் பிறந்தவர்கள் சங்கமேஷ்வரரையோ அல்லது காரணீஸ்வரரையோ ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
கன்னிராசியில் பிறந்தவர்கள் கஞ்சனூரில் உள்ள சுக்ரன் வழிபட்ட ஈஸ்வரனையோ அல்லது நவகிரகங்களில் உள்ள சுக்ரனையும் சூரியனையும் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும்பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியை செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ரெங்கநாதரை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சுப்ரமணிய சுவாமியை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
மகரம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்.
மீன ராசியல் பிறந்தவர்கள் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வீட்டிற்கு வரும் பொழுது சுவாமியின் வஸ்திரங்களையோ அல்லது அபிஷேக தீர்த்தங்களையோ அல்லது கோயில் பிரசாதங்களையோ வீட்டிற்கு எடுத்து வரும்பொழுது குபேரன் அனுக்கிரகம் உண்டாகும்



