ஆரஞ்சு ரெட் கலர் – ஒரு சிட்டிகை
இட்லிகள் – 5
இஞ்சி -பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – ஒரு தேக்கரண்டி
கடலை மாவு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
சீரகத் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் இட்லிகளை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதனோடு இஞ்சி -பூண்டு விழுது, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சுவையான ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் தயார்.