தேவையான பொருட்கள்
1/2 கிலோ மீன்(சங்கரா மீன்)
1ஸ்பூன் மிளகு
1/2ஸ்பூன் சீரகம்
6-7காய்ந்த மிளகாய்
1வெங்காயம்
1தக்காளி
கருவேப்பிலை
1 துண்டு இஞ்சி
4-5 பல் பூண்டு
1தேகரண்டி மிளகாய் தூள்
1/2தேகரண்டி மஞகல் தூள்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் மிளகாய் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.பிறகு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம், கருவேபபிலை,இஞ்சி, பூண்டு மற்றும் தக்காளி சேர்தது வதக்கி எடு்கவும்.இவற்றோடு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு விழுது போல அரைத்து எடுக்கவும்.அரைத்த மசாலாவை மீன் துண்டுகளில் தடவி விட்டு அறை மணி நேரம் கழித்து எண்ணெயில் வறுக்கவும்.சுவையான மசாலா மீன் வறுவல் தயார்.