புதுடெல்லி: ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
* வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க நாடுகள் தங்கள் 100 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வாக்குறுதியை எந்த அளவிற்கு பூர்த்தி செய்கின்றன.
* ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் முதலீட்டு உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறினால், சலுகைகளை திரும்பப் பெறுவதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
* ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்து நாடுகளின் நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் கூட்டாண்மைகளை உருவாக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.
* இந்திய மசாலா ஏற்றுமதியில் உள்ள தரம் மற்றும் மாசுப் பிரச்னைகளை அமைச்சகம் எவ்வாறு கையாள்கிறது.
* இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின்படி தற்போதைய பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தும் முக்கிய தலைப்புகளின் விவரங்கள் மற்றும் புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள தொழிலாளர் கட்சி அரசாங்கத்துடன் அமைச்சகம் ஈடுபட திட்டமிட்டுள்ள விதம் என்ன? என கேள்வி எழுப்பினார்.