சென்னை: மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவித்த ரயில்வே அமைச்சருக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ்தள பதிவு: ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, அனைத்து முருக பக்தர்கள் சார்பாக முன்வைத்திருந்த கோரிக்கையை ஏற்று, சிறப்பு ரயில் இயக்கத்திற்கு அனுமதி அளித்துள்ள ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். .