தர்மபுரி: ஆவடி சிறப்புக் காவல் படையில் பணியாற்றும் தர்மபுரியைச் சேர்ந்த காவலர் சிவராஜ்க்கு கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது. 2016ல் +2 முடித்து பிஎஸ்சி வேதியியல் படித்து, 2020ல் காவல்துறையில் இணைந்தார்; கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால், நடப்பாண்டில் மீண்டும் நீட் எழுதி, 400 மதிப்பெண்கள் பெற்று தற்போது 7.5% அரசுப்பள்ளி மாணவர் ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் கிடைத்துள்ளது.