சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் www.tnstc.in மற்றும் tnstc இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.